ஊழல் ஒழிப்பு முகமூடி போட்ட புலிப் பாசிட்டுகளின் இரு வேறு முகங்கள்
1970 களில் தேர்தலில் தங்களை எதிர்த்துப் போட்டியிட்டவர்களைத் துரோகியென்று கூறி சுட்டுக் கொன்றது போன்று, 1980 களில் சமூக விரோத ஒழிப்பென்ற பெயரில் இயக்கங்களால் தூண்களில் கட்டிச் சுட்டுக்கொன்றது போன்று, இன்று ஊழல் ஒழிப்பின் பெயரில் புலிப் பாசிட்டுகள் களமிறங்கியிருக்கின்றனர்.
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டமென்று சொல்லி, தமிழ் மக்களின் இன்றைய அவல நிலைக்குக் காரணமான புலிப் பாசிசத்தை, இந்த ஊழல் ஒழிப்புவாதிகள் கொண்டாடுகின்றனர். பெண்களின் ஒழுக்கம் குறித்தும் - நடத்தை குறித்தும் தங்கள் ஆணாதிக்கப் பாசிச முகத்தை மூடிமறைத்துக் கொண்டு, பூதக் கண்ணாடியோடு அலைகின்றனர். இந்தப் புலிப் பாசிசக் கும்பலின் எடுபிடியாக டொக்டர் அருச்சுனா களமிறங்கியிருக்கின்றார். அறிவு நாணயமற்ற – பகுத்தறிவற்ற புலிப் பாசிச நிழலில் குளிர்காயும் இந்த ஊழல் ஒழிப்பு வேசமானது ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகும்.
