25
Tue, Jun

மக்கள் போராட்டங்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சைட்டம் எதிர்ப்பு மாணவர் மக்கள் மாநாட்டில் சைட்டம் எதிர்ப்பு போராட்டத்தின் எதிர்கால இலக்கு தொடர்பான 5 தீர்மானங்களை வெளியிட்டு , வந்திருந்த இயக்கங்களின் பிரதிநிதிகள், மாணவர்களின் மற்றும் மக்களின் வாக்கெடுப்பு மூலம் அந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

சைட்டம் எதிர்ப்பு மாணவர் மக்கள் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த மாணவர் மக்கள் மாநாடு இன்று (15.08.2017) பிற்பகல் நுகேகொடை ஆனந்த சமரகோன் திறந்த வெளியரங்கில் நடைபெற்றது. 

 


சைட்டம் எதிர்ப்பு மாணவர் மக்கள் மாநாட்டிற்காக மருத்துவப் பீட மாணவர் செயற்பாட்டு குழு , அனைத்து பல்கலைக்கழக மாணவர் சங்கம் , அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் சங்கம் உட்பட மாணவர் இயக்கங்களின் பிரதிநிதிகள் பெருமளவில் கலந்துக் கொண்டனர்.


அத்தோடு அரச வைத்திய அதிகாரிகளின் சங்கம் உட்பட இன்னும் பல தொழிற் சங்கங்களின் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றனர். முன்னிலை சோஷலிஸக் கட்சி , மக்கள் விடுதலை முன்னணி உட்பட பல கட்சிகளின் தொழிற்சங்க பிரதிநிதிகளும் கலந்துக் கொண்டனர் .


மாநாட்டின் இடையே மருத்துவ சபையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் காலோ பொன்சேகா அவர்களும் மாநாட்டில் இணைந்துகொண்டார்.

 

இங்கு கூடியிருந்த சகல அரசியல் காட்சிகள் , தொழிற்சங்கங்கள், வெகுசன இயக்கங்கள், மாணவர் இயக்கங்களின் பங்களிப்போடு சைட்டம் எதிர்ப்பு போராட்டத்தின் எதிர்கால செயற்பாடுகளை குறித்து தீர்மானங்கள் 5 நிறைவேற்றப்பட்டன. கூடியிருந்த அனைவரும் அந்த தீர்மானங்களை வாசித்து அறிந்தபின் கைகளை உயர்த்தி அனுமதியளித்தனர்.

 

சைட்டம் எதிர்ப்பு போராட்டம் என்பது சமசமாஜ இயக்கத்தில் இருந்து அரசியலுக்கு வந்த, தான் ஈடுபடும் இறுதி போராட்டம் என மருத்துவ சபையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் காலோ பொன்சேகா கூறினார்.


இன்று (15.08.2017) நுகேகொடை ஆனந்த சமரக்கூன் திறந்த வெளியரங்கில் நடைபெற்ற சைட்டம் எதிர்ப்பு மாணவர் மக்கள் மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார் . சைட்டம் நிறுவனத்தில் சுமார் 1000 மாணவர்கள் இருக்கிறார்கள் . ஆனால் அரச மருத்துவ பீடங்களில் 8000 பேர் சைட்டம் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு கல்வி செயற்பாட்டை பகிஷ்கரித்து வருகிறார்கள் என்றும் பேராசிரியர் கூறினார். கோடிக்கணக்கில் செலவிடக்கூடியவர்களுக்காக மருத்துவக் கல்வியை அரசாங்கம் சீரழிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறிய பேராசிரியர் பொன்சேகா இந்த போராட்டம் வெற்றி இன்றி முடிவுக்கு வராது, என்றும் அத்தோடு தனது இறுதி போராட்டம் இதுவென்றும் மருத்துவ சபையின் முன்னாள் தலைவர் மேலும் கூறினார்.

 

நன்றி  Singh Singhst