24
Mon, Jun

சம உரிமை இயக்கம், வடக்கு மற்றும் கிழக்கில் போரால் ஒடுக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளை அரசாங்கம் நீதி மற்றும் நேர்மையுடன் தீர்த்து வைக்க கோரி போராட முடிவு எடுத்துள்ளது. சமவுரிமை இயக்கம் தனது போராட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கும் நோக்கத்தில் இன்று (13-03-2017) யாழில் ஊடகவியலாளர் கூட்டத்தை கூட்டியிருந்தது. சமவுரிமை இயக்கத்தின் சார்பில் கபிலன் சந்திரகுமார் ஊடகவியலாளர் கூட்டத்திற்கு தலைமை தாங்கியிருந்தார்.

புதிய ஜனநாயக மார்க்சிய லெனினிய கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சி.கா. செந்திவேல், சமூக ஜனநாயக கட்சியின் சார்பில் ஸ்ரீதரன் திருநாவுக்கரசு, சமூக நீதி அமைப்பின் சார்பில் அன்ரன் மற்றும் எழுத்தாளர் கருணாகரன் ஆகியோரும் இந்த ஊடகவியலாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார்கள்.

Read more: %s

2009ம் ஆண்டு யுத்தம் முடிவடைந்து 7 வருடங்கள் கடந்து விட்ட நிலையில், யுத்தத்தை நடாத்திய மகிந்த அரசு போய்  தற்போது ரணில் - மைத்திரி அரசு வந்து இரு வருடங்களிற்கு மேலாகி விட்டது. ஆனாலும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் நடைமுறைப்படுத்தப்பட்டதாக தெரியவில்லை.

இன்று ஆட்சியில் வீற்றிருக்கும் ரணில் - மைத்திரி அரசு ஜனநாயகத்தை வழங்குவதாகவும், யுத்தத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நீதி மற்றும் நிவாரணம் வழங்குவதாகவும் வாக்குறுதி கொடுத்தே வடக்கு கிழக்கு மக்களின் பெரும்பான்மையான ஆதரவுடன் அதிகாரத்திற்கு வந்தது. ஆனால் வடக்கு கிழக்கில் யுத்த சூழ்நிலைக்கு நிகராக தொடர்ந்தும் முப்படைகளும் குவித்து வைக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் சுவீகரிக்கப்பட்டுள்ளன.

Read more: %s

கிளிநொச்சியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் காணாமலாக்கப்பட்டவர்களுக்கான போராட்டத்தில் இன்று சமவுரிமை இயக்கம் பங்குபற்றி தமது பூரண ஆதரவை தெரிவித்துள்ளது. சமவுரிமை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர்களில் ஒருவரான யூட் சில்வா புள்ளே அவர்களின் தலைமையில் போராட்ட கொட்டிலுக்க வருகை தந்த சமவுரிமை இயக்கத்தினர் தமது ஆதரவினை தெரிவித்ததுடன், போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர். 

Read more: %s

நேற்று 15-01-2017, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒன்று கூடிய சமவுரிமை இயக்கத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் பொங்கல் விழாவினை கொண்டாடினர். இந்நிகழ்வில் இலங்கையின் மூவின மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர். பொங்கல் நிகழ்வினை தொடர்ந்து கோலாட்டம், நாடகம் மற்றும் பாடல் நிகழ்வுகள் இடம்பெற்றன. குறிப்பாக "இனவாதம்" நாடகம் தமிழ் மற்றும் சிங்களம் மொழிகள் இணைந்தும் தமிழ், சிங்கள கலைஞர்கள் சேர்ந்து நடித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இது பாரிஸ் சமவுரிமை இயக்கதினரின் இரண்டாவது பொங்கல் தின விழாவாகும்.

Read more: %s

எதிர்வரும் ஞாயிறு 15-01-2017 அன்று மாலை 2 மணிக்கு பாரிஸில் சமவுரிமை இயக்கத்தினர் பொங்கல் விழா கொண்டாட இருக்கின்றனர். உழைப்பில் ஈடுபடும் விவசாயிகள் தமது உழைப்பினையும் அதன் விளைவையும் கொண்டாடுவதே பொங்கல் விழாவாகும். இந்த வருட பொங்கல் விழாவினை மொழி, சமயம், சாதி வேறுபாடுகளை கடந்து இலங்கையர் மற்றும் வெளிநாட்டினர் அனைவரையும் ஒன்றிணைத்த கொண்டாட்டமாக கொண்டாட பாரிஸ் சமவுரிமை இயக்கத்தின் கிளை அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றது.

Read more: %s

More Articles …