24
Mon, Jun

கடந்த சில நாட்களாக வடக்கு கிழக்கில் மக்களால் பரவலாக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போராட்டங்களிற்கு ஆதரவாக சமவுரிமை இயக்கத்தினரால் கடந்த 17ம் திகதி ஆரம்பித்த ஒரு வாரகால அடையாள எதிர்ப்பு சத்தியாககிரக போராட்டம் இன்று நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. இன்றைய தினம் சிவில் சமூக அமைப்புக்கள், மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இன்றைய போராட்டத்தில் கலந்து கொண்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை மாரிமுத்து சக்திவேல், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியை ஒத்த ஆட்சியையே மைத்திரி-ரணில் நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக விசனப்பட்டதுடன்; ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் இன்றைய ஆட்சியாளர்கள் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Read more: %s

"அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்!", "சகல காணாமலாக்கல்களையும் உடன் வெளிப்படுத்து!", "நில அபகரிப்பை நிறுத்தி மக்களின் காணியிலிருந்து படையினரை வெளியேற்று!", "பயங்கரவாத தடுப்பு சட்டம் உட்பட சகல அடக்குமுறைச் சட்டங்களையும் இரத்து செய்!"  ஆகிய கோசங்களை முன்வைத்து  கொழும்பு கோட்டையில் சமவுரிமை இயக்கம் ஒரு வாரகால போராட்டம் ஒன்றினை ஆரம்பித்து இன்று 6வது நாள். இன்றைய எதிர்ப்பு போராட்டத்தில் சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்பு உறுப்பினர்கள் கலந்து கொண்டு தமது தார்மீக ஆதரவினை வழங்கியிருந்தனர்.

Read more: %s

அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய், சகல காணாமலாக்கல்களையும் வெளிப்படுத்து, நில அபகரிப்பை நிறுத்தி மக்களின் காணியிலிருந்து படையினரை வெளியேற்று என கொழும்பு கோட்டையில் சமவுரிமை இயக்கம்  போரால் பாதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள்  மற்றும்  தோழமை அமைப்புகளுடன் இணைந்து ஒரு வாரகால போராட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளது. நேற்று காலை 10 மணியளவில் இந்தப் போராட்டம் ஆர்ப்பாட்டத்துடன் முன்னெடுக்கப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இன்று 2வது நாளாக நடைபெற்றக் கொண்டிருக்கும் இந்த  சத்தியாககிரக போராட்டத்திற்கு ஊடகவியலாளர்கள்  ஆதரவு வழங்கி கலந்து கொண்டிருந்தனர். போராட்டத்தின் இரண்டாவது நாளான இன்றைய தினம் கொழும்பிலிருந்து செயற்படுகின்ற ஊடக அமைப்புக்களின் பிரதிநிதிகளும்இ ஊடகவியலாளர்கள் சிலரும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து போராட்டக் களத்தில் இணைந்துகொண்டனர். பல்வேறு ஊடக அமைப்புக்களும் இன்றைய தினம் அங்கு விஜயம் செய்து இந்தப் போராட்டத்திற்கான தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

Read more: %s

வடக்கு-கிழக்கில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போராட்ட்ங்களுக்கு ஆதரவாக "இராணுவம் கையகப்படுத்தியுள்ள பொதுமக்கள் காணிகளை வழங்க கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும், பயங்கரவாத தடைச் சட்டம் உட்பட சகல அடக்குமுறை சட்டங்களையும் இரத்துச் செய்யக்கோரியும், காணாமல் போன உறவுகள் தொடர்பில் தமக்கு உரிய தீர்வை பெற்றுத்தர கோரியும்" இன்று சமவுரிமை இயக்கத்தினால் கொழும்பில் ஒரு வாரகால சத்தியாகிரக போராட்டம் ஆரம்பிக்கபட்டது. இதில் வடக்கு-கிழக்கில் போராடும் மக்களின் பிரதிநிதிகள் மற்றும் இடதுசாரிகள், மனித உரிமை அமைப்புகள் கலந்து கொண்டன.

Read more: %s

இன்று (14-03-2017) கிளிநொச்சியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மக்கள் போராட்டங்களில், தெற்கில் இருந்து வருகை தந்திருந்த சமவுரிமை இயக்கம் மற்றும் சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்புகளை சேர்ந்த அறுபதுக்கும் மேலானவர்கள் கலந்து கொண்டு போராட்டத்திற்கு தமது ஆதரவினை வழங்கியிருந்தனர்.

Read more: %s

More Articles …