30
Sun, Jun

"அனைத்து அரசியல் கைதிகளையும் உடன் விடுதலை செய்!" என்ற கோசத்தை முன்வைத்து, சமவுரிமை இயக்கம், 20.06.2015 சனிக்கிழமை பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை  Westminster Parliament Square இல் போராட்டத்தை நடத்த இருக்கின்றது. இப் போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு அனைவரையும் அழைக்கின்றோம்.

Read more: %s

விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்யக்கோரி இன்று 28.05.2015 பிற்பகல் 3:30 மணிக்கு  கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்னால் சமவுரிமை இயக்கத்தின் முன்னெடுப்பில் மூவின மக்களும் இணைந்து அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்  நடத்தியுள்ளனர். இதில் கைதிகளாக சிறையில் இருப்பவர்களின் உறவுகளும் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தினை நடத்தினர். இப்போராட்டத்தில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியும் கலந்து கொண்டு ஆதரவை வழங்கியது.

Read more: %s

விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்யக்கோரி இன்று 28/05/2015 பிற்பகல் 3:30 மணிக்கு, கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்னால் மாபெரும் ஆர்ப்பாட்டம் நிகழ இருக்கின்றது. இந்த ஆர்ப்பாட்டத்தினை சமவுரிமை இயக்கம் ஒழுங்கு செய்திருக்கிறது.

Read more: %s

சமவுரிமை இயக்கத்தின் அமைப்பாளர் யூட் பேர்ணான்டோ புள்ளே மற்றும் தோழர் கிருபாகரன் ஆகியோர் நேற்றைய தினம் (16-05-2015) வவுனியா கிளிநொச்சி யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் குடும்பத்தினரையும் உறவினர்களையும் சந்தித்து உரையாடல் ஒன்றினை நடாத்தியுள்ளனர். இந்த சந்திப்பின் நோக்கமானது பல வருடங்களாக எந்தவித குற்றச்சாட்டுக்களும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நாடு தளுவிய பாரிய போராட்டங்களை முன்னெப்பதே.

Read more: %s

அண்மையில் திருமலையில் நகர சுத்திகரிப்பு தொழிலாளர்களினால் போராட்டம் ஒன்று இரு நாட்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது. குறிப்பாக இந்த போராட்டம் திருமலை நகரசபைக்கு எதிராக நகர சுத்தி தொழிலாளர்கள் மீதான சாதிய ரீதியான பாகுபாடு மற்றும் அடக்குமுறை ஒடுக்கு முறைகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டது.

Read more: %s

More Articles …