28
Fri, Jun

இன்று ஞாயிறு லண்டனில் நிகழ்ந்த சம உரிமை இயக்கத்தின் அங்குராப்பண கூட்டத்தில் இலங்கையின் மூவினங்களை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் அண்ணளவாக நூற்றிக்கு மேல் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் தோழர்கள் சேனகா, சபேசன், குமார், சீலன், மகிந்தா, சுகத் உட்பட பலர் சம உரிமை இயக்கம் குறித்தும் இலங்கையில் இனவாதத்திற்கு எதிராக சிங்கள மக்கள் மத்தியில் முன்னெடுக்கப்படுகின்ற செயற்பாடுகள் குறித்தும் உரையாற்றினார்கள்.

Read more: %s

உண்மைக்கு புறம்பான தகவல்களை பிரச்சாரப்படுத்தி  சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களிடையே குரோதத்தையும் மோதலையும் தோற்றுவிப்பதற்காக இனவாதம், மதவாதம்  மற்றும் அடிப்படைவாதத்தை தூண்டிவிடும் வகையில் செயற்படும் அமைப்புகளை அம்பலபடுத்தி  மக்களை தெளிவுபடுத்தும் வகையில் நாடு பூராகவும் இன்றைய தினம் (ஜனவரி 31) துண்டுபிரசுரம் விநியோகித்த  சம உரிமை இயக்கத்தின்  செயற்பாட்டாளர்களுக்கு அரசாங்க கட்சியினர், பொலிசார் மற்றும் குண்டர்கள்  தடங்கல்களை ஏற்படுத்தியமையை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

Read more: %s

FIRSTAUDIO.NET இணைய வானொலியில், காற்றலையின் அனுமதியோடு, "சம உரிமை இயக்கம்" பற்றிய அறிமுகமும் அதன் செயற்பாடுகள் குறித்த கலந்துரையாடலும்.  இந்நிகழ்வில் புதிய திசைகள் பாலன் அவர்கள் ஜரோப்பிய சமவுரிமை இயக்க உறுப்பினர்களுடன், இலங்கையிலிருந்து தோழர் பழ.ரிச்சார்ட் (இணை ஏற்பாட்டாளர், சமஉரிமை இயக்கம்) மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதனை ஒலி வடிவில் கேட்க

Read more: %s

26.01.2013- அன்று சுவிஸ்ட்சர்லாந்தில் சமஉரிமை இயக்கத்தின் ஆரம்பமும் கொள்கை விளக்க கூட்டமும் நடைபெற்றது. சிங்கள, தமிழ் மக்கள் என கிட்டத்தட்ட நாற்பது பேர் ஆர்வமுடன் பங்கேற்றனர். தோழர் குமார் குணரட்ணம் (மு.சோ.க) சிங்களத்திலும் தமிழிலும் விசேட உரையாற்றினார். தோழர் றயாகரனும் சிறப்புரையாற்றினார்.

இனவாதத்தை தந்திரமாக தக்கவைத்துக் கொண்டிருக்கும் இலங்கை முதலாளித்துவ ஆட்சியாளர்களையும் அனைத்து சிங்கள, தமிழ், கட்சிகளின் இனவாதத்தில் குளிர்காயும் போலித்தனங்களையும் அம்பலப்படுத்தினார். அங்கு சமூகம் தந்திருந்தவர்கள் இனவாதத்திற்கு எதிரான ஆதரவையும், இவ்விடயம் வளர்த்துச் செல்லப்படவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். அத்தோடு அதற்கான பங்களிப்புக்களை வழங்குவதாகவும் தெரிவித்தனர். மேலும் சம உரிமை இயக்கத்தின் வெளியீடான "போராட்டம்" என்னும் பத்திரிகையை அனைவரும் பெரும் ஆர்வத்துடன் வாங்கிப்படித்தனர்.

Read more: %s

FIRSTAUDIO.NET இணைய வானொலியில், காற்றலையின் அனுமதியோடு, "சம உரிமை இயக்கம்" பற்றிய அறிமுகமும்  அதன் செயற்பாடுகள் குறித்த கலந்துரையாடலும் நிகழவுள்ளது. புதிய திசைகள்  பாலன் அவர்கள் இந்த சந்திப்பை நடத்தவுள்ளார்.

இந்நிகழ்வில் ஜரோப்பிய சமவுரிமை இயக்க உறுப்பினர்களுடன், இலங்கையிலிருந்து தோழர் பழ.ரிச்சார்ட் (இணை ஏற்ப்பாட்டாளர், சமஉரிமை இயக்கம்) மற்றும் பலர் கலந்து கொள்கிறார்கள்.

Read more: %s

More Articles …