28
Fri, Jun

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களை உடன் விடுதலை செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி சம உரிமை இயக்கத்தினால் இணையத்தள மகஜர் கையெழுத்திடல் இன்று ஆரம்பிக்கப்பட்டது. http://www.ipetitions.com/petition/free-jaffna-students-leaders/எனும் இணையத்தள முகவரிக்குள் பிரவேசிப்பதன் மூலம் மகஜரில் கையெழுத்திட முடியும்.

Read more: %s

யுத்தம் முடிவடைந்து கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் கடந்துள்ள போதிலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்த சூழ்நிலையை தொடர்ந்தும் பேணுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்கு சிறந்த உதாரணம் தான் கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்தும் சிவில் நிர்வாகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளமையும், வடக்கில் நடக்கும் இராணுவ நிர்வாகமும். இந்த இராணுவ நிர்வாகத்தின் கீழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டு வருகிறன. கடத்தல், காணாமலாக்கள், கொலை செய்தல், பயமுறுத்தல் மற்றும் சித்திரவதை செய்தல் போன்று உதாரணங்களை கூற முடியும். அவற்றிற்கு மத்தியில் தமிழ் மக்களின் கலாச்சார உரிமைகள் கூட மறுக்கப்பட்டுள்ளன. எவ்வித குற்றச்சாட்டும் இல்லாமல் ஆயிரக்கணக்கானோர் சிறைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இராணுவ பலவந்தத்தை பயன்படுத்தி வடக்கு மக்களின் நிலங்கள் மற்றும் சொத்துக்களை கொள்ளையிடுவதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சிகள் வெளிப்படையாகும்.

Read more: %s

சம உரிமை இயக்கதின் தலைவர்கள் மீது இன்று காலையில் மேற்கொள்ளப்பட்ட கல் வீச்சு தாக்குதல் மற்றும் கழிவு எண்ணெய் தாக்குதல் சம்பந்தமாக முறையிட யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற அதன் தலைவர் ரவீந்திர முதலிகேயின் தனித்துவ அடையாளம் குறித்து கேள்வி எழுப்பியதாகத் தெரிய வருகிறது.

Read more: %s

அநீதியான முறையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்துள்ள யாழ் பல்கலைக் கழக மாணவர்களை உடன் விடுதலை செய்யுமாறும், இராணுவ ஆட்சியை விலக்கிக் கொண்டு சிவில் நிர்வாகத்தை அதமுல்படுத்துமாறும் அரசாங்கத்தை வற்புறுத்தும் எதிர்பு பதாகையில் ஒப்பமிடும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. ஒப்பமிட வந்த மக்கள் தடுக்கப்பட்டனர்,  பொலிஸாரினதும் இராணுவத்தினரினதும் தடைகளை மீறி மக்கள் ஒப்பமிட்டனர்.

வடக்கு கிழக்கில் இராணுவ ஆட்சி நடத்துவதை நிறுத்த கோரி சமவுரிமை இயக்கத்தினால் நாடெங்கிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் மாபெரும் கையெழுத்திடும் கவன ஈர்ப்பு போராட்டம் இன்று யாழ் நகரில் காலை 09:30 மணிக்கு நடைபெற்றது. இவ்வேளை போராட்டம் பத்திரிகையும் விற்பனை செய்யப்பட்டது.

Read more: %s

வடக்கு கிழக்கில் இராணுவ ஆட்சியை நிறுத்த கோரியும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைகழக மாணவர்களை விடுதலை செய்யக்கோரியும், கடத்தல் மற்றும் கைதுகளை நிறுத்த கோரியும் சம உரிமை இயக்கத்தினரால் கையெழுத்து போராட்டம் நடாத்தப்பட்டது.

இந்த கையெழுத்து போராட்டம் இன்று (21) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

இன்று காலை 10 மணியளவில் யாழ் மத்திய பஸ் நிலையத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பல நூற்றுக்கணக்கான மக்கள் தமது கையெழுத்துகளை பதிவு செய்தனர்.

Read more: %s

More Articles …