30
Sun, Jun

அரசு மூலம் இனப்பிரச்சனைக்கான தீர்வு காண்பது தொடர்பாக அதிருப்தியும், அவநம்பிக்கையும் தொடருகின்றது. மறுபக்கம் அலட்சியம், புறக்கணிப்பு, அக்கறையின்மை காணப்படுகின்றது.

தனித்தனியாக போராடுவதோ, அதிலிருந்து ஒதுங்கி இருப்பதோ தீர்வுகளை காண்பதற்கான பாதையுமில்லை.

இதிலிருந்து மீள்வதற்கும், தீர்வுகளை காண்பதற்குமான வழி என்ன? மக்கள் இனம் மொழி மதம் சாதி கடந்து தமக்கு இடையில் ஒன்றிணைந்து வாழ்வதன் மூலமே, தமக்கு இடையிலான இனப் பிரச்சiனைக்குத் தீர்வு காணமுடியும். இது தான் ஒரேயொரு  வழி.

Read more: %s

சமவுரிமை இயக்கம் இனவாதம், மதவாதம், சாதியம் (குலவாதம்) போன்ற ஒடுக்குமுறைகளை எதிர்த்து மாநாடொன்றை இன்று (15-07-2014) கொழும்பில் நடாத்தியது.

கொழும்பு பொது நூலக மண்டபத்தில் நடைபெற்ற இம் மாநாட்டில், நாட்டின் எல்லாப் பகுதியிலிருந்தும் இடதுசாரிக்கட்சிகளின் பிரதிநிதிகள், புத்திசீவிகள், கல்வியாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிராகக் களப்பணியாற்றும் தோழர்களும் பங்குகொண்டனர். மாநாடு நடைபெற்ற கொழும்பு பொதுநூலக வளாகம் முழுவதும் இன, மத வாதத்துக்கு எதிரான பதாதைகள் வைக்கப்பட்டிருந்தது. அத்துடன் நாட்டின் முக்கிய நகரங்களின் நடத்தப்பட்ட "மீண்டுமொரு கறுப்பு ஜூலை வேண்டாம்" என்ற பதாதையில் மக்கள் இனவாதத்துக்கும் மதவாதத்துக்கும் எதிராகக் கையெழுத்திட்டிருந்தனர். அப்பதாதைகளும் அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

Read more: %s

சமவுரிமை இயக்கம் இனவாதம், மதவாதம், சாதியம் (குலவாதம்) போன்ற ஒடுக்குமுறைகளை எதிர்த்து மாநாடொன்றை கொழும்பில் நடாத்தவுள்ளது. இனவாதத்துக்கு எதிராக -குறிப்பாகத் தெற்கில் வேலைகளை முன்னெடுத்துவரும் அதேவேளை, இலங்கையில் அனைத்துப் பகுதியிலும் முளைவிட்டுக் கிளர்தெளுந்துள்ள மதவாததுக்கும், ஏற்கனவே ஆழ வேரூன்றியுள்ள சாதியத்துக்கு/ குலவாதத்துக்கு எதிராகவும் தனது வேலைத் திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளது .

Read more: %s

நாடு தழுவி தொடரும் போராட்டம், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடமாக நடந்து வருகின்றது. இன-மத வாதத்தை யாரைச் சார்ந்து அரசு முன்னெடுக்கின்றதோ, அந்த மக்கள் மத்தியில் இந்தப் பிரச்சாரத்தை சமவுரிமை இயக்கம் குறிப்பாக்கி கூர்மையாக்கி வருகின்றது.

(பொலன்நறுவை)

Read more: %s


இனவாதத்தை மக்களிடம் இருந்து அகற்றவும் மாற்று கலாச்சாரங்களை அங்கீகரிக்கவும் சமவுரிமை இயக்கத்தால் நடத்தப்பட்டுவரும் போராட்டத்தில் பொதுமக்களை இணைக்கும் முன்முயற்சியே இவ் கையேழுத்து போராட்டம். இதனை பல பகுதிகளில் முன்னெடுத்து வருவதுடன் மேலும் பல பகுதிகளில் நடத்தவும் சமவுரிமை இயக்கம் திட்டமிட்டுள்ளது.

Read more: %s

More Articles …