28
Fri, Jun

யாழ்ப்பாணத்தில் சம உரிமை இயக்க உறுப்பினர்களது வாகனத்தின் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது. கைது செய்யப்பட்டு புனர்வாழ்விற்கு உட்படுத்தப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும் என அரசை வலியுறுத்தும் முகமாக கையெழுத்து வேட்டையில் ஈடுபட்டிருக்கும் வேளையிலேயே இவர்களது வாகனத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Read more: %s

யாழ்ப்பாணத்தில் அநீதிக்கு எதிராக கையெழுத்திடும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சம உரிமை இயக்கத்தினர்மீது சற்று முன்னர் ஒயில் வீசப்பட்டுள்ளதுடன் செய்தி சேகரிக்க வந்த ஊடகவியலாளர்களும் ஒப்பமிட கலந்து கொண்ட மக்களும் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இடத்தில் பொலிசார் பாதுகாப்பபு கடமையில் நின்றிருந்த போதும் சம்பவம் தொடர்பாக எவ்வித நடவடிக்கைம் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ் நகரில் அநீதிக்கு எதிராக கையெழுத்திடும் போராட்டத்தில் ஈடு பட்டுக் கொண்டிருந்த சம உரிமை இயக்கத்தின் வாகனம் மீது இன்று காலை 8.45 மணியளவில் இனந்தெரியாத விசமிகள் கல் வீச்சு நடத்தியுள்ளனர்.

 

alt

alt

 

 முஸ்லிம் மக்களுக்கு எதிராக "பொதுபல", "சேனா" போன்ற மதவாத இனவாத அமைப்புகள் அரசாங்க ஆசீர்வாதத்தோடு செயற்படுத்திவரும் திட்டமிட்ட இனவாத அரசியல் நடவடிக்கைகளை கண்டித்து கடந்த 13-ம் திகதி கொழும்பு தேசிய நூலக மற்றும் சுவடுகள் சேவை சபை கேட்போர் கூடத்தில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது. 

இக்கலந்துரையாடலை சமவுரிமை இயக்கம் முன்னின்று நடாத்தியுள்ளது. இதில் இன ஐக்கியத்தை முன்னெடுக்கும் நோக்கில் சிங்கள-தமிழ்-முஸ்லிம்- சமூகங்கங்களைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டார்கள். இவர்களுடன் இடதுசாரிச் சிந்தனைச் செயற்பாட்டாளர்கள், முற்போக்கு எண்ணம் கொண்ட புத்திஜீவிகள், மீனவர் அமைப்புகளின் பிரதிநிதிகள், தொழிலாளர் அமைப்புகளின் தலைவர்கள், முஸ்லிம்-புத்தசமயத் தலைவர்கள், பெண்கள் அமைப்புப் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Read more: %s

வடக்கு கிழக்கில் இராணுவ ஆட்சி நடத்துவதை நிறுத்த கோரி சமவுரிமை இயக்கத்தினால் நாடெங்கிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் மாபெரும் பதாகை கையெழுத்திடும் கவன ஈர்ப்பு போராட்டம் 15-01-2012 அன்று யாழ் நகரில் காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது.

யாழ் பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்!

வடக்கு கிழக்கிலிருந்த ராணுவத்தை வாபஸ் வாங்கு!

வடக்கு கிழக்கில் நில ஆக்கிரமிப்பை நிறுத்து!

கைதுகளையும் கடத்தல்களையும் உடன் நிறுத்து!

அனைத்து அரசியல் சிறைக்கைதிகளையும் உடன் விடுதலை செய்!

Read more: %s

More Articles …