02
Tue, Jul

‘இனவாதத்திற்கு, மதவாதத்திற்கு மற்றும் குலவாதத்திற்கு எதிரான நாங்கள் மனிதர்கள்’ என்ற தொனிப்பொருளில் சம உரிமை இயக்கத்தினால் நடாத்தப்படும் கருத்தரங்குகள் வரிசையில் அடுத்த கருத்தரங்கு மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் 9ம் திகதி பி:ப: 3.00 மணிக்கு கேகாலை தபாலக கேட்போர் கூடத்தில் நடைபெறவிருக்கின்றது.

Read more: %s

இன்று தேசத்தில், நாடு தழுவிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான பல போராட்டங்களை சமவுரிமை இயக்கம் முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக இனவாததுக்கு எதிரான நிகழ்வுகளை அது தென்பகுதியில் முன்னெடுத்து வருகிறது. ஆனி மாதம் முஸ்லீம் சகோதரர்களுக்கு எதிரான மதவாத, இனவாதத் தாக்குதல்களின் பின்னால் உள்ள இனவாத- மேலாதிக்க  சிந்தனை, அரச ஆதிக்க சக்திகளுக்கு   மக்களைப் பிரித்தாள சாதகமான காரணியாக உள்ளது . இதை முறியடிக்கும் நோக்கிலேயே கடந்த ஆடி மாதம் முழுவதும் "மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை வேண்டாம்" என்ற தொனிப் பொருளில் கையெழுத்துப் போராடத்தையும், இன, மத, சாதிய வாதங்களுக்கு எதிரான ஒரு மாநாடையும் சமவுரிமை இயக்கம் நடத்தியது.

Read more: %s

கறுப்பு ஜூலை தினத்தில் "மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை வேண்டாம்" என கோரி யாழில் நேற்று (23) கையெழுத்து போராட்டம் நடைபெற்றது. சமவுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ். மத்திய பஸ் நிலையத்தில் நேற்று காலை 10 மணிக்கு இப்போராட்டம் ஆரம்பமானது. நேற்று யாழ்ப்பபாணத்தில் இடம் பெற்ற கையெழுத்து வேட்டையில் மக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். யுத்தம் முடிந்ததற்கு பின்னரும் யாழ்ப்பாண மக்கள் கடும் நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே வாழ்ந்து வருகின்றார்கள். அங்கு கையெழுத்து வைக்க வந்த தாய் ஒருவர் இப்படிச் சொன்னார். நான் எனது 04 பிள்ளளைகளை யுத்தத்திற்கு பலி கொடுத்து விட்டு நிற்கின்றேன் என்றார். இது ஒரு உதாரணமே. வடக்கு கிழக்கு மக்களின் ஒட்டு மொத்த நிலையே இந்த தாயினது போன்றது தான்.

Read more: %s

தமிழர்களுக்கு எதிராக ஜே.ஆரின் இனவாத அரசின் கீழ் 1983 இல் இடம்பெற்ற யூலை வன்முறைகளின் 31 ஆவது ஆண்டு நிறைவையொட்டி இன்று  மீண்டும் ஒரு கறுப்பு யூலை வேண்டாம் என்ற தலைப்பில் கொழும்பு (பொரல்ல), காலி, பண்டாரவளை, யட்டியாந்தோட்ட(கேகாலை), நாவலப்பிட்டிய மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் சமவுரிமை இயக்கத்தால் கையெழுத்து இடும் போராட்டம் இடம் பெற்றுள்ளது.

Read more: %s

சமஉரிமை இயக்கத்தினர் இம்மாதம் 15ஆம் திகதி கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடாத்திய இனவாதத்திற்க்கும், மதவாதத்திற்கும், குலவாதத்திற்கும் எதிரான நாங்கள் மனிதர்கள் என்ற தலைப்பிலான கருத்தரங்கில்  கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வட இலங்கை முக்கியஸ்தர்   ஏ.எம்.சி.இக்பால் ஆற்றிய உரை!

ஜூன் 15 ஆம் திகதி பேருவளை, தர்காநகர், அளுத்கம, வெளிப்பனை போன்ற இடங்களில் பரம்பரை பரம்பரையாக வாழும் முஸ்லிம் மக்கள் தாக்கப்பட்டும் அவர்களது வீடுகளும் கடைகளும் கொள்ளையிடப்பட்டு எரியூட்டப்பட்டது. மூன்று பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டதுடன் நான்கு பேர் கொல்லப்பட்டுள்னர். சிறிய எண்ணிக்கையான அங்கத்தவர்களை கொண்ட பொதுபல சேனாவினர் மிகப்பெரிய கலவரத்தை பேருவளை பிரதேசத்தில் நடாத்தியுள்ளனர். L.T.T.E இயக்கத்தை தோற்கடித்த இந்த அரசுக்கோ, முப்டைகளுக்கோ அஞ்சாமல் இந்த வன்முறையை அரங்கேற்றிள்ளனர். இந்த வன்முறைக்கு காரணமானவர்களை கைது செய்யவோ தடுத்துவைக்கவோ இல்லை. அரசும், அரசபடைகளும் பொதுபலசேனா என்ற இயக்கத்துக்கு அஞ்சுகிறார்கள் போலும். இதுபெரும் ஆச்சரியத்துக்குரிய விடயமாகும்.

Read more: %s

More Articles …