30
Sun, Jun

இலங்கையில் இன்று முஸ்லீம் சகோதரர்களுக்கு எதிராக நடாத்தப்படும் திட்டமிட்ட இனக்கலவரம், கொலைகள், சொத்துகளைச் சூறையாடுதல்- அழித்தல் போன்ற நடவடிக்கைகளை கண்டித்து சமவுரிமை இயக்கம், நாளை (18.06.204) மாலை 4 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து சமவுரிமை இயக்கம் விடுத்துள்ள அழைப்பு:

யுத்தம் நடைபெற்ற காலத்தில் சிங்களவர்களின் எதிரிகளாக தமிழர்களையும், தமிழர்களின் எதிரிகளாக சிங்களவர்களையும் காண்பித்தார்கள். தற்போது எழுச்சி பெற்றிருக்கும் சிங்களவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையிலான நம்பிக்கையீனம், சந்தேகம், எதிரித்தன்மை போன்றவை திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை. இந்த கொடுந்தீக்கு பெற்றோல் ஊற்றியவர்கள் வெவ்வேறு இனவாத, மதவாத குழுக்களாகும். இக்குழுக்கள் இயங்குவது அரச அதிகார வர்க்கத்தின் அங்கீகாரத்துடன் என்பது ஒன்றும் ஒளிவுமறைவானதல்ல!

Read more: %s

நேற்றைய மேதினத்தில்,  சமவுரிமை இயக்கத்தின் ஜரோப்பிய கிளைகள் அந்தந்த நாடுகளில் இடம்பெற்ற மேதின ஊர்வலங்களில் பங்குபற்றியுள்ளன. ஜரோப்பிய நாடுகளில் உள்ள பாரிய தொழிற்சங்கங்களினாலும் இடதுசாரிகளினாலும் இந்த மேதின ஊர்வலங்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சமவுரிமை இயக்கமானது முன்னிலை சோசலிசக் கட்சி மற்றும் இலங்கை சார்ந்த ஜனநாயக அமைப்புக்களுடன் இணைந்து இந்த நிகழ்வழில் கலந்து கொணடது குறிப்பிடத்தக்கது. மேதின ஊர்வல படங்களை இங்கு காணலாம்.

Read more: %s

தேசிய ஒடுக்குமுறையினை தோற்கடிக்க சமவுரிமைக்காக போராடுவோம்!

ராணுவவாதத்தினை தோற்கடிப்போம்!.

நவதாராளவாத முதலாளித்துவத்தினை தோற்கடிக்க கடலலை போன்று ஜக்கியப்படுவோம்!

வடக்கு கிழக்கில் இராணுவ ஆட்சியை அகற்று!

Read more: %s

தினக்குரல் பத்திரிகையின் யாழ். வடமாரச்சிக்கான பிரதேச நிருபர் சிவஞானம் செல்வதீபன் கடந்த 14ம் திகதி இரவு அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு கடுமையான காயங்களுடன் பருத்தித்துறை மாந்தை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செல்வதீபன் இற்றைக்கு சில வருடங்களுக்கு முன்னர் செல்வதீபனின் சகோதரர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டதற்கு எதிராக குரலெழுப்பியவராகும்.

Read more: %s

வெகுஜன இயக்கங்களின் அடிப்படை என்பது, ஒடுக்கப்பட்ட பல்வேறு வர்க்கங்களின் முரணற்ற பொதுக்கோரிக்கையை இணைக்கும் பொதுத்தளம். இது பரந்துபட்ட வெகுஜனங்கள் பங்கு கொள்ளக் கூடிய, சமூக இயக்கத்துக்கு வழிகாட்டுகின்றது. இதில் பல்வேறு கட்சிகள், சமூக இயக்கங்கங்கள் கூட முரணற்ற (இந்த) ஜனநாயகக் கோரிக்கைளுடன், தங்களை இணைத்துக் கொண்டு போராடுவதற்கான வெளியும் கூட.

அதேநேரம் அவ் வெகுஜன இயக்கத்தில் பங்கு கொள்ளும் ஒரு கட்சி கொண்டிருக்கக் கூடிய அரசியல் நிலைப்பாடுகளை உள் நுழைப்பது அல்லது அதன் அடிப்படையில் வெகுஜன அமைப்புடன் முரண்படுவது, வெகுஜன இயக்க செயற்பாட்டையும் அதன் நோக்கத்தை அழிக்கின்ற அரசியல் முன்முயற்சியாகவே இருக்கும். ஒரு கட்சி கொண்டு இருக்கக் கூடிய உயர்ந்தபட்சத் திட்டங்களை, வெகுஜன இயக்கத்தில் தேடுவதும், அதன் அடிப்படையில் இந்த வெகுஜன இயக்கத்தை கேள்விக்கு உள்ளாக்குவதும் வெகுஜன இயக்கத்தின் அவசியத்தை மறுப்பதும், அந்த அரசியல் செயற்பாட்டை இல்லாதாக்குகின்ற அரசியல் முயற்சியுமாகும.

Read more: %s

More Articles …