30
Sun, Jun

இலங்கையில் முஸ்லீம் சகோதரர்கள் மக்கள் மீது பவுத்த அடிப்படைவாத அமைப்புகளாலும், அரசாலும் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இனரீதியிலான வன்முறையினை கண்டித்து, லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றினை சமவுரிமை இயக்கத்தின் பிரித்தானிய கிளை இன்று (20.06.2016) நடாத்தியது. குறுகிய அழைப்புக்காலம் எனினும் நூற்றுக்கு மேற்பட்ட அனைத்து இன மக்களும், பாதிக்கப்பட்ட சகோதரர்களுக்காக, அவர்களின் உரிமையை வலியுறுத்தி உணர்வு பூர்வமாகக் கலந்து கொண்டனர். கடந்த நூறு வருடங்களாக கொடிய இனவாதத்திற்க்காக இரத்தம் வடித்தது போதும். எமது எதிர்கால சந்ததியினர் மனிதர்களாக வாழ ஒன்றிணைந்து எதிர்த்து நிற்போம். இனவாத, மதவாத அரக்கர்களை விரட்டி அடிப்போம் என்ற கோசத்துடன், போராட்டத்தில் பங்கெடுத்த சமவுரிமை இயக்கத்தின் தலைமைத் தோழர்களின் உரைகள் அமைந்தது .

Read more: %s

இலங்கையில் முஸ்லீம் மக்கள் மீது அடிப்படைவாத அமைப்புகளாலும், அரசாலும் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இனரீதியிலான வன்முறையினை கண்டித்து, லண்டன் இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றினை சமவுரிமை இயக்கத்தின் பிரித்தானிய கிளை ஒழுங்கு செய்துள்ளது.

கடந்த நூறு வருடங்களாக கொடிய இனவாதத்திற்க்காக இரத்தம் வடித்தது போதும். எமது எதிர்கால சந்ததியினர் மனிதர்களாக வாழ ஒன்றிணைந்து எதிர்த்து நிற்போம். இனவாத, மதவாத அரக்கர்களை விரட்டி அடிப்போம்.

Read more: %s

அண்மையில் நடந்து முடிந்த பேரழிவுகளுக்கு அடிப்படைவாத அமைப்புகளும், அவர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதித்த அரசாங்கமுமே பொறுப்பேற்க்க வேண்டும். இதிலிருந்து இருதரப்பும் விடுபட முடியாது. மீண்டுமொரு கறுப்பு ஜூலை வேண்டாம் என்ற தலைப்பில் ஜூலை 18 கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்க்கு முன்பாக சம உரிமை இயக்கம் நடாத்திய ஆர்பாட்டத்தி;ன் போது அந்த இயக்கத்தின் அமைப்பாளர் தெரிவித்தார்.

Read more: %s

இலங்கை அரச அதிகாரத்தை வைத்திருக்கும் ஆட்சியாளர்களின் ஆதரவுடன் பொதுபல சேனா மற்றும் மதவாத - இனவாத சக்திகள் முஸ்லீம் சகோதரகளுக்கு எதிராக நட்த்தும் பயங்கரவாத வன்முறையினைக் கண்டித்தும், நீதிகோரியும் இன்று 18.08.2014 கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக சமவுரிமை இயக்கம் பாரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தியது .

அனைத்துச் சமூகத்தினரும், கட்சிகளும், மதத்தலைவர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அதிக அளவில் சிங்கள மொழி பேசும் மக்களுடன் பிக்குகள் பலரும் கொழும்பு வாழ் முஸ்லீம் சகோதர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இப்போராட்டத்தில் வடக்கின் பிரபல அரசியல்வாதியும் வடமாகாண சபை உறுப்பினருமான சிவாஜிலிங்கம், முன்னிலை சோசலிசக் கட்சித் தலைவர்கள், நவசமாசக் கட்சி தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன போன்ற தலைவர்களும் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் சம உரிமை ஏற்பாட்டாளர் ரவீந்ர முதலிகே  உரையாற்றுகையில்,

தற்போது நாட்டில் உருவாகியுள்ள இன மற்றும் மதவாத வன்முறைப்போக்கிற்கு பிரதான காரணம் எமது நாட்டில் பின்பற்றப்பட்டுவரும் பிழையான அரசியல் முறைமையே என்று குற்றஞ்சாட்டியதுடன் இந் நிலைமையை மாற்றி அமைக்க நடை முறைச்சாத்தியமான அரசியல் மாற்றம் ஒன்றின் அவசியத்தை வலியுறித்தினார்.

இதே கருத்தையே அங்கு தமிழில் உரையாற்றிய முஹமட் பாரூக் அவர்களும் வலியுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more: %s

நாம் இத்துண்டுப்பிரசுரம் ஊடாக உங்களைச் சந்திப்பது நாட்டின் ஒருபகுதியில் இனவாத, மதவாத கொடுந்தீ கொழுந்துவிட்டு எரியும் சந்தர்ப்பத்திலாகும். அண்மையில் தர்க்கா நகரில் ஆரம்பித்த இந்தத்தீ அளுத்கம, பேருவளை வழியாக பரவி வருகிறது. மதப்பற்றுள்ள சிங்கள பௌத்தர்களுக்கும் மார்க்கப்பற்றுள்ள முஸ்லிம்களுக்கும் இடையிலான சிறு சிறு பிரச்சினைகளுக்காக, குழந்தைகள் முதியவர்கள் உள்ளிட்ட அப்பாவி மக்கள் படுகொலையாவுமளவுக்கு சென்றதேன்?. தற்போது வியாபார நிலையங்கள் பல தீயிடப்பட்டுவிட்டது, பல உயிர்கள் பலியாகியுள்ளன, மேலும் பலர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தனை கொடுமைகளும் எதனை பகிர்ந்து கொள்ள முடியாமல் போனதற்காக? இந்த வன்முறை ஆரம்பமாகியது எப்படி?

Read more: %s

More Articles …