28
Fri, Jun

இலங்கை அரசியலும் புலம்பெயர் அரசியலும் - புதிய ஜனநாயக மக்கள் முன்னணி சார்பில் உரையாற்றிய இரயாகரனின் உரையின் ஒலிவடிவம் 25.05.2013

லணடனில் நிகழ்ந்த மேதின ஊர்வலத்தில் சமவுரிமை இயக்கம் பங்கேற்றுக் கொண்டது. இந்த நிகழ்வு பிரித்தானிய இடதுசாரிய கட்சிகளினாலும், புலம்பெயர்ந்து வாழும் பல்லின நாட்டு கம்யூனிஸ்டுக்களாலும் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. சமவுரிமை இயக்கத்தினருடன் முன்னிலை சோசலிசக் கட்சியும் ஒன்றிணைந்து இந்த ஊர்வலத்தில் பங்கு கொணடது. "புதிய திசைகள்" அமைப்பின் உறுப்பினர்களும் சமவுரிமை இயக்கத்தின் அழைப்பினை ஏற்று, சமவுரிமை இயக்கத்துடன் சேர்ந்து கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Read more: %s

1. வடக்கு கிழக்கில் இராணுவ ஆட்சியை நிறுத்து!

Abolish military rule in North & East

2. மக்களினது வாழ்வுரிமைக்காக போராடுவோம்!

Let us fight for peoples' right to live

3. வடக்கு கிழக்கில் திட்டமிட்ட நில அபகரிப்புக்கு எதிராக போராடுவோம்!

Let us align against the pillage of lands in North & East

Read more: %s

தோழர்களே!

உலகெங்குமுள்ள தொழிலாளர்கள் தேசம், இனம் என எல்லாவற்றையும் கடந்து ஒன்றுபட்டு தமது உரிமைக்காக உலகளவில் திரண்டெழும் இம் மேநாளில் சமவுரிமை இயக்கம், உங்களை இவ் உழைப்பாளர் தினத்தில் வரவேற்பதில் மகிழ்வு கொள்கிறது.

ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட பாரிய அடக்குமுறைகளுக்கு எள்ளளவும் வேறுபாடின்றிய அதேவழிகளில் இன்றைய மகிந்த அரசு நம்நாட்டு மக்களின் சமூக அரசியல் பொருளாதார வாழ்வாதாரத்துக்கான போராட்டங்களை நசுக்கி வருகின்றது. உண்மையாக நாடு எதிர்நோக்கும் பிரச்சனைகளிலிருந்து இனவெறிப் பிரச்சாரங்கள் மூலமாய் மக்களை திசைதிருப்பும் தந்திரத்தை இந்த அதிகாரப் பேராசை கொண்ட ஆட்சியாளர்கள் செய்து வருகின்றனர். வடக்கு வாழ் மக்களுக்கு வசந்தம் வழங்குவோமென்ற இந்த அரசானது வடக்கு மக்களை முன்னெப்போதையும் விட மோசமான இராணுவ ஆட்சிப்பிடிக்குள் அடக்கி வைத்திருக்கின்றது. வடக்கு மக்கள் இராணுவ ஆதிக்கப் பிடிக்குள் கட்டுண்டு கிடக்கிறார்கள்.

Read more: %s

இன்று (13) அதிகாலையில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள உதயன் பத்திரிகை அச்சகத்தின் மீது தாக்குதல் நடாத்தி குழுவொன்று அச்சகத்திற்கும் தீ வைத்துள்ளது. இதற்கு முன்னர் ஏப்ரல் 03ம் திகதி இரவு கிளிநொச்சியில் அமைந்துள்ள உதயன் அலுவலகத்திற்குள் திடீரென நுழைந்த குழுவொன்று அதனை தாக்கி அங்கிருந்த பொருட்களை சேதமாக்கியது. உதயன் பத்திரிகை கூறுவதைப் போன்று 32 சந்தர்ப்பங்களில் தாக்குதல் நடத்தியிருப்பதோடு இது 33வது தாக்குதலாகும். அரசாங்கத்தோடு உடன்படாத கருத்துக்களை வெளியிடும் ஊடகங்களுக்கு எதிராக செயற்பட்டுவரும் வெட்கம் கெட்ட அடக்குமுறை குறித்து இது சிறந்த உதாரணமாகும். 

Read more: %s

More Articles …