25
Tue, Jun

நேற்றைய தினம்  சனிக்கிழமை 27/06/2015 அன்று அவுஸ்திரேலியா மெல்பேர்ன் நகரில் உள்ள பெடரேசன் சதுக்கத்தில. "அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்" என இலங்கை அரசை நிர்ப்பந்திக்கும் போராட்டத்தினை சமவுரிமை இயக்கத்தின் உறுப்பினர்கள் முன்னெடுத்திருந்தனர்.

சமவுரிமை இயக்கம் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி போராட்டத்தினை தொடர்ச்சியாக இலங்கை முதல் புலம்பெயர்ந்த நாடுகள் வரை நடாத்திக் கொண்டிருக்கின்றது. அண்மையில் பிரான்ஸ் மற்றும்  லண்டனில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்தப் போராட்டத்தில் அவுஸ்திரேலிய இடதுசாரிகள் பங்கு பற்றியதுடன் தமது ஆதரவினையும் வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

நேற்றைய தினம் லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் பாராளுமன்ற சதுக்கத்திற்கு அருகாமையில் சமவுரிமை இயக்கத்தால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த "அரசியல் கைதிகளை விடுதலை செய்" போராட்டம்  சர்வதேசத்து மக்களின் கவனத்தை ஈர்க்குமுகமாக நடாத்தப்பட்டது. இந்த நிகழ்வில் சிங்கள- தமிழ் மக்கள் கலந்து கொண்டு கோசங்களை எழுப்பி அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரினர்.

Read more: %s

பாரிஸ் இபிள் (Eiffel Tower)  ரவருக்கு அருகாமையில் நேற்றைய தினம் (14/06/2015) இலங்கை சிறைகளில் அரசியல் காரணங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற அனைத்து கைதிகளையும் நிபந்தனை இன்றி விடுதலை செய்ய கோரி போராட்டம் இடம்பெற்றது.

Read more: %s

கனடா சம உரிமை இயக்கத்தின் முதலாவது கலாச்சார நிகழ்வான "யாவரும் கேளிர்" கலை நிகழ்வு 13,06,2015 அன்று ஸ்காபுறோ சிவிக் மண்டபத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. முதலில் வரவேற்புரை மூத்த இடதுசாரியும் சமூக சிந்தனையாளருமான திரு மார்க் சூசை அவர்களால் வழங்கப்பட்டது.

Read more: %s

அரசியல் கைதிகள் அனைவரையும் உடனடியாக தாமதமின்றி விடுதலை செய் என்ற கோசத்தை முன்வைத்து சமவுரிமை இயக்கம், 14.06.2015 ஞாயிறுக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரை Palce Trocaderor வில் போராட்டத்தை நடத்த இருக்கின்றது. இப் போராட்டத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

சமவுரிமை இயக்கம் (பிரான்ஸ்)

Read more: %s

எதிர்வரும் 13ம் திகதி (ஜீன் - ஆனி மாதம்) சனிக்கிழமை அன்று கனடாவில் "யாவரும் கேளிர்" கலை நிகழ்வு இடம்பெற இருக்கின்றது. இந்நிகழ்வினை சமவுரிமை இயக்கத்தின் கனடா கிளை ஒழுங்கு செய்துள்ளது. இலங்கையில் நிலவுகின்ற இன ஒடுக்குமுறைக்கு எதிராக பெரும்பான்மை இன சிங்கள உழைக்கும் மக்களை அணிதிரட்டி, சகல இன மக்களுக்கும் சமவுரிமையினை உறுதி செய்யுமுகமாக கடந்த சில வருடங்களாக சமவுரிமை இயக்கம் பல போராட்டங்களை நடாத்தி வருகின்றது.

Read more: %s

"அனைத்து அரசியல் கைதிகளையும் உடன் விடுதலை செய்!" என்ற கோசத்தை முன்வைத்து, சமவுரிமை இயக்கம், 20.06.2015 சனிக்கிழமை பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை  Westminster Parliament Square இல் போராட்டத்தை நடத்த இருக்கின்றது. இப் போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு அனைவரையும் அழைக்கின்றோம்.

Read more: %s

விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்யக்கோரி இன்று 28.05.2015 பிற்பகல் 3:30 மணிக்கு  கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்னால் சமவுரிமை இயக்கத்தின் முன்னெடுப்பில் மூவின மக்களும் இணைந்து அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்  நடத்தியுள்ளனர். இதில் கைதிகளாக சிறையில் இருப்பவர்களின் உறவுகளும் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தினை நடத்தினர். இப்போராட்டத்தில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியும் கலந்து கொண்டு ஆதரவை வழங்கியது.

Read more: %s

More Articles …