28
Fri, Jun

தோழர்களே!

உலகெங்குமுள்ள தொழிலாளர்கள் தேசம், இனம் என எல்லாவற்றையும் கடந்து ஒன்றுபட்டு தமது உரிமைக்காக உலகளவில் திரண்டெழும் இம் மேநாளில் சமவுரிமை இயக்கம், உங்களை இவ் உழைப்பாளர் தினத்தில் வரவேற்பதில் மகிழ்வு கொள்கிறது.

ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட பாரிய அடக்குமுறைகளுக்கு எள்ளளவும் வேறுபாடின்றிய அதேவழிகளில் இன்றைய மகிந்த அரசு நம்நாட்டு மக்களின் சமூக அரசியல் பொருளாதார வாழ்வாதாரத்துக்கான போராட்டங்களை நசுக்கி வருகின்றது. உண்மையாக நாடு எதிர்நோக்கும் பிரச்சனைகளிலிருந்து இனவெறிப் பிரச்சாரங்கள் மூலமாய் மக்களை திசைதிருப்பும் தந்திரத்தை இந்த அதிகாரப் பேராசை கொண்ட ஆட்சியாளர்கள் செய்து வருகின்றனர். வடக்கு வாழ் மக்களுக்கு வசந்தம் வழங்குவோமென்ற இந்த அரசானது வடக்கு மக்களை முன்னெப்போதையும் விட மோசமான இராணுவ ஆட்சிப்பிடிக்குள் அடக்கி வைத்திருக்கின்றது. வடக்கு மக்கள் இராணுவ ஆதிக்கப் பிடிக்குள் கட்டுண்டு கிடக்கிறார்கள்.

Read more: %s

இன்று (13) அதிகாலையில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள உதயன் பத்திரிகை அச்சகத்தின் மீது தாக்குதல் நடாத்தி குழுவொன்று அச்சகத்திற்கும் தீ வைத்துள்ளது. இதற்கு முன்னர் ஏப்ரல் 03ம் திகதி இரவு கிளிநொச்சியில் அமைந்துள்ள உதயன் அலுவலகத்திற்குள் திடீரென நுழைந்த குழுவொன்று அதனை தாக்கி அங்கிருந்த பொருட்களை சேதமாக்கியது. உதயன் பத்திரிகை கூறுவதைப் போன்று 32 சந்தர்ப்பங்களில் தாக்குதல் நடத்தியிருப்பதோடு இது 33வது தாக்குதலாகும். அரசாங்கத்தோடு உடன்படாத கருத்துக்களை வெளியிடும் ஊடகங்களுக்கு எதிராக செயற்பட்டுவரும் வெட்கம் கெட்ட அடக்குமுறை குறித்து இது சிறந்த உதாரணமாகும். 

Read more: %s

நோர்வே சமவுரிமை இயக்க அங்குரார்பண மற்றும் கொள்கை விளக்கக் கூட்டம்  நேற்று வியாழக்கிழமை 28.03.13 அன்று ஒஸ்லோவில் நடைபெற்றது.  லோரன்ஸ்ஸ்கொக் பிரதேச மண்டபத்தில் நடைபெற்ற கூட்டடத்திற்கு தோழர் தங்கன் தலைமை தாங்கினார். தோழர்கள் சிறிகரன், ஜவன், குமார்  உரையாற்றினர்.

Read more: %s

ஒஸ்லோ, நோர்வே சமவுரிமை இயக்க அங்குரார்பண மற்றும் கொள்கை விளக்கக் கூட்டம்  நேற்று வியாழக்கிழமை 28.03.13 அன்று நடைபெற்றது. தோழர்கள்  ஐவன் மற்றும் கேதீஸ் ஏற்பாட்டில் லோரன்ஸ்ஸ்கொக் பிரதேச மண்டபத்தில் நடைபெற்ற கூட்டடத்திற்கு தோழர் தங்கன் தலைமை தாங்கினார். தோழர் சிறிகரன் நோர்வே சமவுரிமை இயக்கத்தின்  எதிர்கால வேலைகளை பற்றியும், இனவாதத்துக்கு எதிராக அனைவரும் இணைந்து செயற்படுவது பற்றியும் தனதுரையில் வலியுறித்தினார்.

Read more: %s

ஐரோப்பாவில் பரந்து வாழ்கின்ற இலங்கை மக்களின் மத்தியில், சம உரிமை இயக்கம் தனது கொள்கை பரப்புதலுக்கான அங்குரார்ப்பணக் கூட்டங்களை நடாத்தி வருகின்றது. இந்த வகையில் தற்போது டென்மார்க் கொல்ஸ்ரப்புறோ நகரில் தோழர்கள் குமார் குணரட்னம், சிறி மற்றும் முன்னணித் தோழர்களுடன் இக் கூட்டம் நடைபெற்றது. இதன்போது 35இற்கும் மேற்பட்ட தமிழ்மக்கள் கலந்துகொண்டு கலந்துரையாடினர்.

Read more: %s

டென்மார்க் கோஸ்ரப்பரோவில் சம உரிமை இயக்க அங்குராப்பண கூட்டமும் கலந்துரையாடலும் (27/3/2013) இன்று நடைபெற்றது. தோழர்கள் ஸ்ரீஹரன், முரளி ஆகியோர் தலைமை வகித்தனர். முன்னிலை சோஷலிச கட்சியின் தலைமை உறுப்பினர் தோழர் குமார் குணரத்தினம் சிறப்புரை ஆற்றியதுடன் கலந்துரையாடலிலும் கலந்து கொண்டார்.

Read more: %s

இத்தாலியின் வட பகுதியில் உள்ள வேறோனா நகரில் சமவுரிமை இயக்கத்தின் அங்குரார்பண நிகழ்வு  24.03.2013 அன்று நடைபெற்றது. அதில் தோழர்கள் ஸ்ரீஹரன், விஜித்த, றோகித்த ஆகியோர் தலைமை வகித்தனர். முன்னிலை சோஷலிச கட்சியின் தலைமை உறுப்பினர் தோழர் குமார் குணரத்தினம் சிறப்புரை ஆற்றினார். மேலும்  இத்தாலிய இடதுசாரி அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்குகொண்டனர். இதில் குறிப்பிடத்தக்க அளவில் அனைத்து இன மக்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles …