28
Fri, Jun

டென்மார்க்கில் கொல்ஸ்ரோபுறோ நகரில் 14.12.2013, சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு இலங்கை அரசிற்கு எதிரான கண்டனக் கூட்டமும், கலந்துரையாடலும் நடைபெற்றது. இந்த கண்டன எதிர்ப்புக் கூட்டத்தில் தமிழ், சிங்கள தோழர்கள் கலந்து கொண்டார்கள். இலங்கையில் இருந்து சம உரிமை இயக்கத்தின் பரப்புரையாளர் ரவீந்திரமுதலிகே, சம உரிமை இயக்கத்தின் அமைப்பாளர் ஜீட் சில்வா புள்ளே ஸ்கைப் இல் சிங்கள மொழியில் உரையாற்ற தோழர் பாரூக் தமிழில் மொழி பெயர்த்து வழங்கி கொண்டிருந்தார். சம உரிமை இயக்கத்தின் நோக்கம் அதன் செயற்பாட்டுத் திட்டம் பற்றிய விரிவான விளக்கம் இந்த உரையின் மூலம் மக்களுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து கூட்டத்தில் பங்கு பற்றிய சிலரது கேள்விகளுக்கு தமிழ், சிங்கள மொழியில் பதிலளிக்கப்பட்டது.

Read more: %s

மனித உரிமைகளை நிலைநாட்ட ஒன்றிணைந்து போராடுவோம்! என்ற தொனிப்பொருளில், இந்தாலிய சம உரிமை இயக்கம் நடாத்திய - கடத்தல்கள்  உரிமை மீறல்களுக்கு எதிரான போராட்டம்  நேற்றைய தினம் இடம் பெற்றது. இதில் பல வெளிநாட்டினர் கலந்து கொண்டு இலங்கை அரசால் மேற்கொள்ளப்படுகின்ற மனித உரிமை மீறல்ளுக்கு எதிராகவும் குகன், லலித்தை விடுதலை செய்யக்கோரியும் தமது கையெழுத்துக்களை பதிந்து சென்றனர்.

சுதந்திரம் அடைந்த காலம் முதல் இலங்கையை ஆண்டு வருகின்ற அரசியல் கட்சிகள் அவற்றின் தலைவர்கள் தமது அரசியல் இருப்புக்காக அடிப்படை மனித உரிமைகளான பேச்சு, எழுத்து, கருத்துச் சுதந்திரங்களைச் சாதாரண மக்களிற்கு மறுத்து வந்துள்ளனர். மேலும் மக்களை இனம், மதம், மொழி வாரியாக பிரித்து வைத்து இனக்கலவரங்களைத் தூண்டியும், மனித உரிமைகளை மறுக்கின்ற சட்டங்களை இயற்றியும் மக்கள் ஒன்றிணைந்து தமக்கு எதிராக அணிதிரளா வண்ணம் திட்டமிட்டு இவர்கள் செயற்பட்டு வந்தனர் வருகின்றனர்.

இதற்கு பல உதாரணங்களைக் கூறலாம். குறிப்பாக மலையக மக்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டமை, சிங்களச் சட்டமூலம் மற்றும் தமிழ்-முஸ்லீம் மக்களின் மீது திட்டமிட்டு நடாத்தப்பட்ட பல இனக்கலவரங்கள், தொழிலாளர் போராட்டங்கள் மீதான அரச படைகளின் திட்டமிட்ட தாக்குதல்கள் என பலவற்றினைக் கூறலாம்.

Read more: %s

சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு சமஉரிமை இயக்கம், ஜரோப்பாவில் கூட்டங்கள் கலந்துரையாடல்களை ஒழுங்கு செய்துள்ளது.

டென்மார்க்கில் எதிர்வரும் 14ம் திகதி சனிக்கிழமை கோல்ஸ்ரபரோ நகரில் பொதுக்கூட்டம் கலந்துரையாடலுடன் இலங்கையர்களின் ஒன்று கூடல் நிகழவிருக்கின்றது.

Read more: %s

இலங்கையில் மூன்று தசாப்தங்களாக நடைபெற்று வந்து போரானது முடிவுற்ற பின்னர் நான்கு ஆண்டுகள் இன்று கடந்து விட்டன.

இலங்கைக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் சமீபத்தில் நடாத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியின் போது நடந்தேறிய தாக்குதல் நிகழ்வுகள் வெளிப்படுத்துவது எதுவெனில், இலங்கையின் உள்நாட்டுப் போர் விளைவித்த வரலாற்றில் என்றுமே ஏற்பட்டிராத அழிவுகளையும், மனித அவலங்களையும், கொடூரங்களையும் இந்தச் சிங்கள மற்றும் தமிழ் சமூகங்களிலுள்ள இனவெறிச்சக்திகள் மறந்து இனவாத தீயினைத் தூண்டும் போக்கில் பயணிக்கின்றனர் என்பதேயாகும். இனியும் எந்தவொரு நீண்ட பேரழிவானது எழாமல் தடுக்கும் வகையில், சிஙகள மற்றும் தமிழ் என இருபுறமும் உள்ள இனவெறிச் சக்திகளை நாங்கள் தோற்கடித்தாக வேண்டும்.

Read more: %s

இலங்கை அரசியலும் புலம்பெயர் அரசியலும் - புதிய ஜனநாயக மக்கள் முன்னணி சார்பில் உரையாற்றிய இரயாகரனின் உரையின் ஒலிவடிவம் 25.05.2013

லணடனில் நிகழ்ந்த மேதின ஊர்வலத்தில் சமவுரிமை இயக்கம் பங்கேற்றுக் கொண்டது. இந்த நிகழ்வு பிரித்தானிய இடதுசாரிய கட்சிகளினாலும், புலம்பெயர்ந்து வாழும் பல்லின நாட்டு கம்யூனிஸ்டுக்களாலும் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. சமவுரிமை இயக்கத்தினருடன் முன்னிலை சோசலிசக் கட்சியும் ஒன்றிணைந்து இந்த ஊர்வலத்தில் பங்கு கொணடது. "புதிய திசைகள்" அமைப்பின் உறுப்பினர்களும் சமவுரிமை இயக்கத்தின் அழைப்பினை ஏற்று, சமவுரிமை இயக்கத்துடன் சேர்ந்து கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Read more: %s

1. வடக்கு கிழக்கில் இராணுவ ஆட்சியை நிறுத்து!

Abolish military rule in North & East

2. மக்களினது வாழ்வுரிமைக்காக போராடுவோம்!

Let us fight for peoples' right to live

3. வடக்கு கிழக்கில் திட்டமிட்ட நில அபகரிப்புக்கு எதிராக போராடுவோம்!

Let us align against the pillage of lands in North & East

Read more: %s

More Articles …