25
Tue, Jun

சமவுரிமை இயக்கம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

"அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்!", "சகல காணாமலாக்கல்களையும் உடன் வெளிப்படுத்து!", "நில அபகரிப்பை நிறுத்தி மக்களின் காணியிலிருந்து படையினரை வெளியேற்று!", "பயங்கரவாத தடுப்பு சட்டம் உட்பட சகல அடக்குமுறைச் சட்டங்களையும் இரத்து செய்!"  ஆகிய கோசங்களை முன்வைத்து  கொழும்பு கோட்டையில் சமவுரிமை இயக்கம் ஒரு வாரகால போராட்டம் ஒன்றினை ஆரம்பித்து இன்று 6வது நாள். இன்றைய எதிர்ப்பு போராட்டத்தில் சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்பு உறுப்பினர்கள் கலந்து கொண்டு தமது தார்மீக ஆதரவினை வழங்கியிருந்தனர்.

இந்த எதிர்ப்பு போராட்டமானது கடந்த 17ம் திகதி வடக்கு-கிழக்கில் போராடும் மக்களின் பிரதிநிதிகள் மற்றும் இடதுசாரிகள்இ மனித உரிமை அமைப்புகளின் பங்குபற்றுதலுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

18ம் திகதி 2ம் நாள் போராட்டத்தில் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். 19ம் திகதி 3ம் நாள் போராட்டத்தில் கலைஞர்கள் கலந்து கொண்டிருந்தனர். 20ம் திகதி 4ம் நாள் போராட்டத்தில் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பங்குபற்றி இருந்தனர்.

நேற்றைய தினம் 5ம் நாள் போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்களின் பிரதிநிதிகள் பங்குபற்றி எதிர்ப்பு போராட்டத்திற்கு தரவினை வழங்கியிருந்தனர்.