25
Tue, Jun

சமவுரிமை இயக்கம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஜனாதிபதி அவர்கள் அரசியல் கைதிகள் என எவரும் சிறைச்சாலைகளில் இல்லை, அங்கு உள்ள 215 கைதிகளும் தண்டனைக்குள்ளானவர்களே. எனவே அரசியல் கைதிகள் விடுதலை பற்றி எவரும் கதைத்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் எனும் தொனிப்பட் அண்மையில் தெரிவித்திருந்தார். ஆனால் சிறைச்சாலை பதிவுகளின் படி இந்த கைதிகள் சிறுபான்மை மக்களுக்கு மறுக்கப்பட்ட அரசியல் உரிமைகளுக்கு காரணமான யுத்தத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து மிக நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் என்பதே உண்மை.

இலங்கையின் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்க்கான ஒரு திருப்புமுனையில் இருப்பதாக தெரிவிக்கும் அரசு; அரசியல் காரணங்களிற்க்காக சிறைப்பிடிக்கப்பட்டவர்களிற்கு பொது மன்னிப்பு வழங்குவதில் என்ன தடை இருக்க முடியும்? பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒழிப்பதில் என்ன தடை?

அரசியல் கைதிகள் தான் ஜனாதிபதி தெரிவிக்கும் 215 பேரும். உண்மையான சமாதானம் தீர்வு பற்றி பேசுவதானால் முதலில் இந்த அரசியல் கைதிகள் நல்லெண்ண அடிப்படையில் உடனடியாக விடுதலைக்கு உள்ளாக வேண்டும் என வலியுறுத்தி சமவுரிமை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் ரவீந்திர முதலிகே மற்றும் யூட் சில்வாபுள்ளே இருவரும் இந்த பத்திரிகையாளார் கூட்டத்தை இன்று 7/1/2016 நடாத்தினர்.