25
Tue, Jun

சமவுரிமை இயக்கம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சர்வதேச மனித உரிமை நாளான இன்று 10.12.2015, சமவுரிமை இயக்கம் போராட்டமொன்றை கொழும்பில் நடாத்தியது.

கடத்தப்பட்டோர், காணமலாக்கக்பட்டோரை விடுவி!

அவர்கள் பற்றிய தகவல்களை இப்போதாவது வெளியிடு! .

போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டம் இடம்பெற்றது.

கடத்தப்பட்டோர், காணமலாக்கப் பட்டோரைப் பற்றி  இலங்கையில் அதிகாரம் சார்ந்த எதிர்கட்சிகளோ அல்லது ரணில்-மைத்ரி அரசோ மூச்சுக் கூட விடத் தயாரில்லை. ஐக்கிய நாடுகள் சபையின்  சர்வதேச  மனித உரிமை மன்றத்தின் சில கோரிக்கைகளை மேலோட்டமாக நடைமுறைப்படுத்தும் வகையில், மனித உரிமைகள் ஆணைக்குழுவை யாழுக்கு அனுப்ப முடிவு செய்தது. ஆனால் கடத்தப்பட்டோர், காணமலாக்கப் பட்டோரின் உறவினர்கள்; மனித உரிமைகள் ஆணைக்குழுவை தாம் சந்திக்க விரும்பவில்லை என்று யாழில்  08.12.2015 அன்று நடந்த  கூட்டத்திலும்,  ஊடக அறிகையிலும் தெரிவித்துள்ளனர். அதேவேளை,  மனித உரிமைகள் ஆணைக்குழுவை சந்திக்க விரும்பாத உறவினர்கள் கொழும்புக்குச் வந்து இன்று சமவுரிமை இயக்கம் ஏற்பாடு செய்த போராட்டத்தில் பங்குகொண்டனர். அதேபோன்று கிழக்கிலிருந்தும் மேற்படி போராட்டத்தில் உறவினர்களும், மனித உரிமை ஆர்வலர்களும், கடத்தப்பட்டோர், காணமலாக்கப் பட்டோரின் விடுதலையைக் கோரும்  இன்றைய போராட்டத்தில் பங்கு கெடுத்துக் கொண்டனர்.

கோட்டை புகையிரத நிலையத்தின் துன்பாக ஆர்ப்பாட்ட போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் போனவர்களின் உறவினர்களும், மனித உரிமையாளலர்களும், சமவுரிமை இயக்கத்தினரும் ஊர்வலமாக ஜனாதிபதி அலுவலகத்தை நோக்கி கோசங்களை எழுப்பிய வண்ணம் சென்றனர். வீதித் தடையினை நிறுவி இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தினை பொலீசார் தடுத்து நிறுத்தினர். அங்கு நிகழ்ந்த வாக்குவாதங்களின் பின்னர் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மாத்திரம் ஜனாதிபதி செயலகத்திற்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

சமவுரிமை இயக்கத்தின் சார்பில் ரவீந்திர முதலிகே, ஜோர்ச் பெர்ணான்டோ புள்ளே, சஞ்சீவ பண்டார ஆகியோருடன் காணாமல் போன குடும்பப்பினர்களை சிலரும் சென்று ஜனாதிபதி அலுவலகத்தில்  மகஜர் கொடுப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டது.