25
Tue, Jun

சமவுரிமை இயக்கம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சமவுரிமை இயக்கம்  அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்! பயங்கரவாத தடைச் சட்டத்தை இனியாவது நீக்கு ! என்ற இரு கோரிக்கைகளை முன்னிறுத்தி  மாபெரும் போராட்டம் ஒன்றை நடத்தியது. கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக  (இன்று) 14.10.2015 அன்று காலை 10 மணிக்கு சமவுரிமை இயக்கத்தினால் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது .

இப்போராட்டத்தில் அரசியல் கைதிகளின் குடும்பத்தினர் பங்கேற்றதுடன் மகஜர் ஒன்றும் கையெழுத்திடப்பட்டு ஜனாதிபதி மைத்திரி சிறிசேனா அவர்களிடம் கையளிக்கப்பட்டது .இந்தப் போராட்டத்தில் கைது செயப்பட்டவர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் மற்றும் தமிழ் சிங்கள மக்கள் அனைவரும் கலந்து கொண்டு அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அழுத்தம் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது . 

இப் போராட்டத்தில் திரு சிவாஜிலிங்கம், திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , திரு குமரகுருபரன் உட்பட பல தமிழ் அரசியல்வாதிகள் கலந்து கொண்டு அரசியல் கைதிகளின் விடுதலைக்காக குரல் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.