25
Tue, Jun

சமவுரிமை இயக்கம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

எதிர்வரும் 13ம் திகதி (ஜீன் - ஆனி மாதம்) சனிக்கிழமை அன்று கனடாவில் "யாவரும் கேளிர்" கலை நிகழ்வு இடம்பெற இருக்கின்றது. இந்நிகழ்வினை சமவுரிமை இயக்கத்தின் கனடா கிளை ஒழுங்கு செய்துள்ளது. இலங்கையில் நிலவுகின்ற இன ஒடுக்குமுறைக்கு எதிராக பெரும்பான்மை இன சிங்கள உழைக்கும் மக்களை அணிதிரட்டி, சகல இன மக்களுக்கும் சமவுரிமையினை உறுதி செய்யுமுகமாக கடந்த சில வருடங்களாக சமவுரிமை இயக்கம் பல போராட்டங்களை நடாத்தி வருகின்றது.

மேலும் மூவின மக்களிடையே ஒற்றுமை, புரிந்துணர்வு என்பவற்றை நிலைநாட்டும் முகமாக கலை நிகழ்வுகளை நடாத்தி வருகின்றது. இதன் தொடர்ச்சியாக கனடாவில் மூவின மக்களையும் இணைத்து இந்த விழா ஒருங்கமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அனைவரையும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு சமவுரிமை இயக்கம் அழைப்பு விடுக்கின்றது.

நிகழ்வு விபரங்கள்:

* வரவேற்புரை: மார்க் சூசை

* கனடிய பூர்வீக நடனமும் இசையும்: றொசாரி ஸ்பென்ஸ்

* நாட்டார் பாடல்கள்: சுல்பிகா இஸ்மெயில்

* கண்டிய நடனம்: றசான்தி கெட்டியாராட்சி

* கருத்துரை: கெவின் சிமென்

* சமாதனத்துக்கான மெல்லிசை: நடீஸ் ஜெயசிங்க

* கருத்துரை: பற்றிமா காதர்

* "யாவரும் கேளிர்" நாட்டிய நாடகம்: வசந்தா டானியல்

* "BOW DOWN" (Hip Pop dance): மெலனி கெங்காதரன்

* கருத்துரை: சந்திரசேகர்

* தென்மோடி மெட்டுக்கள்: மெலிஞ்சி முத்தன்

* நன்றியுரை: நிருபா

 

இடம்: Scarborough Civic Center, 150 Borough Drive, Toronto ON M1P 4N7

காலம்: Saturday June 13th 2015 from 2:00pm

அனுமதி இலவசம் & வாகன தரிப்பிடம் இலவசம்

தொடர்வுகளுக்கு: 416-917-0549 & 416-801-1654

சமவுரிமை இயக்கம்