25
Tue, Jun

சமவுரிமை இயக்கம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

15.11.2014 சனி அன்று, டென்மார்க்கின் கொல்ஸ்ரப்புறோ நகரில் சம உரிமை இயக்கத்தின் "வசந்தத்தை தேடுகிறோம்" விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் சம உரிமை இயக்கத்தின் செயல் வடிவமான இனவாதம் - மதவாதம் - குலவாதம் என்ற சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான கருத்துகளும், நிகழ்வுகளும் மக்களுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டன.

இந் நிகழ்வில் ஆவணப் படம் - உரை - நடனம் - இசை எனப் பல நிகழ்வுகள் இடம்பெற்றன. இதில் கலந்து கொண்ட நூற்றுக்கு மேற்பட்ட தமிழ், சிங்கள, டெனிஷ் மக்கள் விழாவின் இறுதி நேரம் வரை அமர்ந்திருந்து கருத்துப் பரிமாறிச் சென்றனர்.

இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்த மக்கள் மத்தியில், டென்மார்க் நாட்டில் முதல் முறையாக இப்படியோர் கலை நிகழ்வு சிறப்பாக நடந்தமை இங்கு குறிப்பிடத் தக்கதாகும்.

-ERM Denmark nwes