25
Tue, Jun

சமவுரிமை இயக்கம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஒன்றுபட்டால் தான் இனி உண்டு வாழ்வு

ஒற்றுமை நீங்கின் நம் அனைவருக்கும் தாழ்வு

இனமத வேறுபாடுகளை கிளறி பிளக்கப்பட்டது நம்மிடையேயான மானிட உறவு

மூன்று தசாப்தங்களாக நீடித்த போரில் பறிபோன உயிர்கள் நமது சொந்தங்களே!

போர் விளைவித்த அவலங்கள் சொல்லி மாளாதவை

இருந்தும் எந்த சுதந்திரமும் யாராலும் எட்டப்படவில்லை

மீளவும் இனவாத மதவாத வெறிக் கூச்சல்களே உரத்து ஒலிக்கின்றது.

 

இனப்பிளவை மதப்பிளவை உருவாக்கி

ஒடுக்குபவன் முன்னால் அவன் எண்ணப்படியே,

நாங்கள் அவ்வாறே பிளவுண்டே நிற்க வேண்டுமா?

 

சேர்ந்து பலம் கொண்டு எம்மால் மிடுக்கோடு

மானிட விடுதலைக்காக அணிசேர முடியாதா?

 

இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு தேட ஒக்டோபர் 19 மாலை 2 மணிக்கு பாரிஸ் நகர் கெம்பற்றா மண்டபத்திற்கு வருகை தரவும்!!

சமவுரிமை இயக்கம்

(ஜரோப்பா)