25
Tue, Jun

சமவுரிமை இயக்கம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கையில் முஸ்லீம் மக்கள் மீது அடிப்படைவாத அமைப்புகளாலும், அரசாலும் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இனரீதியிலான வன்முறையினை கண்டித்து, லண்டன் இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றினை சமவுரிமை இயக்கத்தின் பிரித்தானிய கிளை ஒழுங்கு செய்துள்ளது.

கடந்த நூறு வருடங்களாக கொடிய இனவாதத்திற்க்காக இரத்தம் வடித்தது போதும். எமது எதிர்கால சந்ததியினர் மனிதர்களாக வாழ ஒன்றிணைந்து எதிர்த்து நிற்போம். இனவாத, மதவாத அரக்கர்களை விரட்டி அடிப்போம்.

வேண்டாம் வேண்டாம் இனவாதம்

வேண்டாம் வேண்டாம் மதவாதம்

மக்கள் ஒற்றுமை ஓங்கட்டும்!

மனிதநேயம் தளைக்கட்டும்!

 

30 வருட யுத்தம் - போதும் போதும்!

இனியொரு யுத்தம் - வேண்டாம் வேண்டாம்!

இனியொரு கறுப்பு ஜுலை -வேண்டாம் வேண்டாம்!

சிந்திய ரத்தம் - போதும் போதும்!

 

சிங்கள, தமிழ்- முஸ்லிம் நாங்கள்

சிந்திய ரத்தம் - போதும் போதும்!

இனவெறியை - தோற்கடிப்போம்!

மதவெறியை - தோற்கடிப்போம்!

மக்கள் ஒற்றுமை ஓங்கட்டும்!

மனிதநேயம் தளைக்கட்டும்!

***************************

காலம்: வெள்ளி 20 யூன் மாலை 2.00 முதல் 5.00 வரை

இடம்: லண்டன் இலங்கை உயர்ஸ்த்தானிகர் அலுவலகம் முன்பாக

NO 13, Hyde Park Gardens, London W2 2LU

Nearest Tube Station: Lancaster Gate

Contacts: Senake Rodrigo 07951322712, Seelan - 07930 991940