25
Tue, Jun

சமவுரிமை இயக்கம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இன்று ஞாயிறு லண்டனில் நிகழ்ந்த சம உரிமை இயக்கத்தின் அங்குராப்பண கூட்டத்தில் இலங்கையின் மூவினங்களை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் அண்ணளவாக நூற்றிக்கு மேல் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் தோழர்கள் சேனகா, சபேசன், குமார், சீலன், மகிந்தா, சுகத் உட்பட பலர் சம உரிமை இயக்கம் குறித்தும் இலங்கையில் இனவாதத்திற்கு எதிராக சிங்கள மக்கள் மத்தியில் முன்னெடுக்கப்படுகின்ற செயற்பாடுகள் குறித்தும் உரையாற்றினார்கள்.

தோழர் குமார் பேசுகையில், சம உரிமை இயக்கத்தின் இன்றைய தேவையினையும் அவசியத்தினையும் வலியுறுத்தியதுடன், முன்னிலை சோசலிச கட்சி இந்த சம உரிமை இயக்கத்தினை தொடக்கி வைத்துள்ள பாத்திரத்தினை மட்டுமே வகிக்கின்றது. சம உரிமை இயக்கத்திற்கென  ஒரு அரசியல் வேலைத்திட்டமும் செயல்திட்டமும் உள்ளது. அதனடிப்படையில்  இது பரந்து பட்ட ஒரு மக்கள் இயக்கமாக முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டியதன் அவசியத்தினை வலியுறுத்தியதுடன், இனவாத்திற்கு எதிராக போராட அனைத்து சமூக ஜனநாயகவாதிகளிற்கும் அழைப்பு விடுத்தார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட பலரும் சம உரிமை இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றுவதில் பெருத்த அக்கறை கொண்ட்வர்களாக காணப்பட்டதுடன், இறுதியில் நிகழ்ந்த கலந்துரையாடலில் மிகவும் ஆரோக்கியமான வகையில் கருத்துக்களை முன்வைத்தனர்.