25
Tue, Jun

சமவுரிமை இயக்கம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

உண்மைக்கு புறம்பான தகவல்களை பிரச்சாரப்படுத்தி  சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களிடையே குரோதத்தையும் மோதலையும் தோற்றுவிப்பதற்காக இனவாதம், மதவாதம்  மற்றும் அடிப்படைவாதத்தை தூண்டிவிடும் வகையில் செயற்படும் அமைப்புகளை அம்பலபடுத்தி  மக்களை தெளிவுபடுத்தும் வகையில் நாடு பூராகவும் இன்றைய தினம் (ஜனவரி 31) துண்டுபிரசுரம் விநியோகித்த  சம உரிமை இயக்கத்தின்  செயற்பாட்டாளர்களுக்கு அரசாங்க கட்சியினர், பொலிசார் மற்றும் குண்டர்கள்  தடங்கல்களை ஏற்படுத்தியமையை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

 துண்டுபிரத்தின் pdf வடிவம்

இன்று  காலை பதுளை நகரத்தில் துண்டுபிரசுரங்களை விநியோகித்து கொண்டிருந்த எமது இயக்கத்தின் செயட்பாட்டாளர்களை முன்னாள் பதுளை நகரசபை உறுப்பினர் தயாசிறி தலைமையில் வந்த குழுவினர் தாக்கியதோடு துண்டுபிரசுரங்களையும் அபகரித்து சென்றனர். கேகாலை மாவனல்லை பிரதேசத்தில் துண்டுபிரசுரம் விநியோகித்த   எமது இயக்கத்தின் செயட்பாட்டாளர்களை அவ்விடத்திற்கு வந்த பொலிசார் அச்சுறுத்தியதோடு அரசாங்கத்திற்கு எதிராக துண்டுபிரசுரம் விநியோகித்தமையை  காரணமாக குறிப்பிட்டு போலிசிற்கு வந்து வாக்குமூலம் தருமாறும் கட்டாயபடுத்தியுள்ளனர். 

துண்டுபிரசுரத்தில் இனவாதத்திற்கு எதிராகவும் சிங்கள முஸ்லிம் மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தியும் கருத்து பகிரபட்டமை அரசாங்கத்திற்கு எதிரானதா என்பதை அரசாங்கமே தெளிவு படுத்த வேண்டும். சிங்கள முஸ்லிம் மக்களை பிளவுபடுத்தும் வன்முறைக்கு எதிராக செயற்படும் செயட்பாடாளர்களுக்கு  அரசாங்க தரப்பு அரசியல்வாதிகள் மற்றும் பொலிசார் தடைகளை விதிப்பதானது இச்சதி செயலின் பின்னால் யார் இருக்கின்றார்கள் என்பதை தெளிவுபடுத்தும் என நம்புகின்றோம்.

சம உரிமை இயக்கத்தின் செயட்பாட்டளர்கள் மீது ஏற்படுத்திய தடைகளையும், செயட்பாட்டாளர்களை அச்சுறுத்தியமையையும், தாக்கியமையையும் வன்மையாக கண்டிப்பதோடு எத்தனை தடைகள் வந்தாலும் இனவாதம் மற்றும் அடைப்படைவதாத்திற்கு எதிராக சகல ஒடுக்கப்பட்ட மக்களையும் ஒன்றுதிரட்டும் எமது நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்நோக்கி கொண்டு செல்வோம் என்பதையும் உறுதியுடன் தெரிவிக்கின்றோம்.

(பதுளை  நகரத்தில் மேற்க்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக பதுளை போலீசில் c(2)71/553 என்ற இலக்கத்தின் கீழ் முறைப்பாடு செயப்பட்டதுடன் மாவனல்லை சம்பவம் தொடர்பாக மாவனல்லை பொலிசார் முறைப்பாட்டை ஏற்க மறுத்துவிட்டனர்)

நன்றி

ரவீந்திர முதலிகே -0718296434

ஏற்பாட்டாளர்

சம உரிமை இயக்கம்.

2013-01-31