25
Tue, Jun

சமவுரிமை இயக்கம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அநீதியான முறையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்துள்ள யாழ் பல்கலைக் கழக மாணவர்களை உடன் விடுதலை செய்யுமாறும், இராணுவ ஆட்சியை விலக்கிக் கொண்டு சிவில் நிர்வாகத்தை அதமுல்படுத்துமாறும் அரசாங்கத்தை வற்புறுத்தும் எதிர்பு பதாகையில் ஒப்பமிடும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. ஒப்பமிட வந்த மக்கள் தடுக்கப்பட்டனர்,  பொலிஸாரினதும் இராணுவத்தினரினதும் தடைகளை மீறி மக்கள் ஒப்பமிட்டனர்.

வடக்கு கிழக்கில் இராணுவ ஆட்சி நடத்துவதை நிறுத்த கோரி சமவுரிமை இயக்கத்தினால் நாடெங்கிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் மாபெரும் கையெழுத்திடும் கவன ஈர்ப்பு போராட்டம் இன்று யாழ் நகரில் காலை 09:30 மணிக்கு நடைபெற்றது. இவ்வேளை போராட்டம் பத்திரிகையும் விற்பனை செய்யப்பட்டது.

கீழ் உள்ள கோசங்களை முன்வைத்து கையெழுத்து போராட்டம் இடம்பெற்றது.

யாழ் பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்!

வடக்கு கிழக்கிலிருந்த ராணுவத்தை வாபஸ் வாங்கு!

வடக்கு கிழக்கில் நில ஆக்கிரமிப்பை நிறுத்து!

கைதுகளையும் கடத்தல்களையும் உடன் நிறுத்து!

அனைத்து அரசியல் சிறைக்கைதிகளையும் உடன் விடுதலை செய்!