25
Tue, Jun

சமவுரிமை இயக்கம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

யாழ்ப்பாணத்தில் சம உரிமை இயக்க உறுப்பினர்களது வாகனத்தின் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது. கைது செய்யப்பட்டு புனர்வாழ்விற்கு உட்படுத்தப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும் என அரசை வலியுறுத்தும் முகமாக கையெழுத்து வேட்டையில் ஈடுபட்டிருக்கும் வேளையிலேயே இவர்களது வாகனத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்தாக்குதலினால் வாகனத்தின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளதாகவும், இத்தாக்குதலை பாதுகாப்பு படையினரே செய்துள்ளதாக தாம் சந்தேகிப்பதாகவும் சம உரிமை இயக்கம் தெரிவித்துள்ளது.  இன்று (15) காலை 8.45 மணியளவில் யாழ். நகரப்பகுதியில் வாகனத்தை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேளை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இரு மோட்டார் சைக்கிளில்களில் வந்த நபர்களே இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மோட்டார் சைக்கில்கள் இரண்டில் ஒன்றின் இலக்கம் ஜே.வை. 2177 என சம உரிமை இயக்கம் மேலும் தெரிவித்துள்ளது.