25
Tue, Jun

சமவுரிமை இயக்கம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 முஸ்லிம் மக்களுக்கு எதிராக "பொதுபல", "சேனா" போன்ற மதவாத இனவாத அமைப்புகள் அரசாங்க ஆசீர்வாதத்தோடு செயற்படுத்திவரும் திட்டமிட்ட இனவாத அரசியல் நடவடிக்கைகளை கண்டித்து கடந்த 13-ம் திகதி கொழும்பு தேசிய நூலக மற்றும் சுவடுகள் சேவை சபை கேட்போர் கூடத்தில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது. 

இக்கலந்துரையாடலை சமவுரிமை இயக்கம் முன்னின்று நடாத்தியுள்ளது. இதில் இன ஐக்கியத்தை முன்னெடுக்கும் நோக்கில் சிங்கள-தமிழ்-முஸ்லிம்- சமூகங்கங்களைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டார்கள். இவர்களுடன் இடதுசாரிச் சிந்தனைச் செயற்பாட்டாளர்கள், முற்போக்கு எண்ணம் கொண்ட புத்திஜீவிகள், மீனவர் அமைப்புகளின் பிரதிநிதிகள், தொழிலாளர் அமைப்புகளின் தலைவர்கள், முஸ்லிம்-புத்தசமயத் தலைவர்கள், பெண்கள் அமைப்புப் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

கலந்துரையாடலின் முடிவில் இன-ஐக்கியத்தை அறிவுறுத்தும் வகையிலான சமூக உரையாடல்களை, பின்தங்கிய கிராமப் புறங்களில் இருந்து, ஆரம்பிப்தெனவும், அதற்கான வேலைத்திட்டம் ஒன்றும் தயாரிப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது. இத்திட்டத்தை தயாரிப்பதற்கும், கலந்துரையாடல்களை தொடர்ந்து செய்வதற்குமான குழு ஒன்றும் தெரிவு செய்யப்பட்டுள்து.