28
Fri, Jun

நாளை 15.07.2014 கொழும்பு பொது நூல் நிலையத்தில் இனவாதத்திற்கும், மதவாதத்திற்கும், குலவாதத்திற்கும் (சாதியத்திற்கும்) எதிரான நாங்கள் மனிதர்கள் என்ற கருப்பொருளில் சமவுரிமை இயக்கத்தால் மாநாடு நடக்கவிருக்கும் நிலையில், சனிக்கிழமை அன்று நுவரெலியாவில் மீண்டும் ஒரு கறுப்பு யூலை வேண்டம் என்ற கையேழுத்து போராட்டம் இடம் பெற்றுள்ளது. இதில் மூவின மக்களும் இனைந்து தமது ஆதரவை தெவித்துள்ளனர். இதுவரை நடந்த இடங்களை விட அதிகமாகவர்கள் ஆர்வத்துடன் பங்களித்தமை சமவுரிமை இயக்கத்தில் செயற்பாட்டை மேலும் வலியுறுத்தியுள்ளது.

Read more: %s

முஸ்லிம் மக்களுக்கு எதிரான இன முறுகல் நிலை நேற்று அளுத்கமயில் உக்கிரமடைந்து மூன்று அப்பாவி உயிர்களை காவு கொண்டு விட்டது. இவ்வாரானதொரு சூழல்தான் வடக்கு கிடக்கில் யுத்தத்திற்கு மூல காரணியாக காணப்பட்டது.

30 வருட யுத்தம் முடிவடைந்து. 05 வருடங்கள் கழிந்த நிலையிலும் இன்னமும் அந்த வடுக்கள் மக்கள் மத்தியில் ஆறவில்லை. நிலைமை இவ்வாறு இருக்கையில், நேற்று அளுத்கமயில் நடந்திருக்கும் சம்பவமானது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும் என்று முன்னிலை சோசலிச கட்சி இன்று (16) ராஜகிரியவில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது கட்சியின் உறுப்பினர் ரவீந்திர முதலிகே மற்றும் புபுது ஜாகொட ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.

Read more: %s

இலங்கை அரசின் கல்விக் கொள்கை, மனித உரிமை மீறல்கள் , மாணவர்களில் கல்வி கற்கும் உரிமை மறுப்பு, கல்வியைத் தனியார் மயப்படுத்தல் போன்ற மாணவர் விரோத செயற்பாடுகளுக்கு எதிராக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பல்முனைப் போராட்டங்களை பலவடிவங்களிலும் நடாத்தி வருகின்றது. இப்போராட்டகளுடன், யாழ். மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளதற்கு எதிரான போராட்டங்களும் இணைக்கப்பட்டு முன்னெடுக்கப்படுகிறது.

Read more: %s

'இன்போம்" நிறுவனத்தைச் சேர்ந்த பிரபல மனித உரிமை செயற்பாட்டாளர்களான திரு ருகி பர்ணாந்து மற்றும் சமாதானம் மற்றும் மீள் கூட்டமைப்பு சம்பந்தமான நிலையத்தின் முக்கியஸ்தர் அருட்தந்தை பிரவீன் ஆகியோர் கடந்த 16ம் திகதி இரவு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து முன்னிலை சோஷலிஸக் கட்சியின் ஊடகப்பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை வருமாறு

'ஆட்சியாளர்களினால் மேற்கொள்ளப்பட்டுவரும் ஜனநாயகத்திற்கு முரணான செயல்களுக்கு எதிராக குரலெழுப்பும் மனித உரிமை செயற்பாட்டாளர்களின் குரல்வளையை நசுக்குவதற்காக எடுக்கப்படும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிக்கின்றோம். மார்ச் 16ம் திகதி இரவு பாதுகாப்புப் படையினரால் முதல்நிலை மனித உரிமை செயற்பாட்டாளர்களான 'இன்போம்" நிறுவனத்தின் ருகீ பர்னாந்து மற்றும் சமாதானம் மற்றும் மீள் கூட்டபை்பு சம்பந்தமான முக்கியஸ்தர் அருட்தந்தை பிரவீன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read more: %s

பிரபல கவிஞர் ஜெயபாலன் கைது செய்யப்பட்டமை குறித்து கருத்து தெரிவித்த துமிந்த நாகமுவ, ''தமிழ் கவிஞர்கள் மத்தியில் முக்கிய இடத்தை வகிக்கும் ஜெயபாலனது கவிதைகள் சிங்களத்திற்கு மொழிமாற்றம் செய்யப்படுவதால், அவர் சிங்கள கவிஞர்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பபை பெற்ற கவிஞராகத் திகழ்கிறார். அவர் கைது செய்யப்பட்டமை மற்றும் அவரை நாடுகடத்துவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை நாங்கள் வன்மையாக் கண்டிக்கிறோம்.

Read more: %s

More Articles …