26
Wed, Jun

கடந்த மே மாதம் 02ம் திகதி அரசாங்கம் விதித்த வரிகளின் சுமையை மக்கள் இப்போது உணரத் தொடங்கியுள்ளார்கள். ஒவ்வொரு பொருளினதும் விலை ஏறிக்கொண்டே போகின்றது. சுகாதார சேவைக்கு புதிதாக வரி விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனைகளுக்கு, வைத்தியரை செனல் செய்ய, மருந்துகளுக்கு என்று சகலதிற்கும் புதிததாக 15% வரி விதிக்கப்பட்டது. தொலைபேசி கட்டணத்திற்கு விதித்துள்ள வரியை பார்த்தால் வயிறு பற்றி எரிகின்றது. தண்ணீர் கட்டணமும் அதிகரிக்கின்றது. மின்சாரக் கட்டணமும் அதிகரிக்கின்றது. அது மட்டுமல்ல, வீட்டுக் கடனுக்கான வட்டி கடந்த நான்கு மாதங்களில் 9.3% லிருந்து 12.5%  அதிகரித்துள்ளது. தனியார் கடன் (Personal Loan) வட்டி 11% லிருந்து 17.5% வரை அதிகரித்துள்ளது. வாகனம் எடுப்பது எப்படியிருந்தாலும் வீட்டை கட்டிக் கொள்ளவும் முடியாத நிலை.

Read more: %s

ஒவ்வொரு மனிதனும் நீதி நியாயத்தைத்தான் கேட்டு நிற்கின்றான். நாட்டின் அதிகார பீடத்திலுள்ளவர்கள் தான் அதனை நிறைவேற்ற வேண்டும். அதிகாரத்தில் இருப்பவர்களிடமே நீதி நியாயத்தை கேட்க வேண்டிய நிலையில் இந்நாட்டு மக்கள் இருக்கின்றார்கள். முன்னாள் ஆட்சியாளர்களை விமர்சித்தும் ஜனநாயகத்தை கேட்டு மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தினையும் பயன்படுத்தியே இந்நாள் ஆட்சியாளர்கள் அதிகாரத்திற்கு வந்தார்கள். குறிப்பாக, ஜனநாயகம் சம்பந்தமான பிரச்சினைகள் அன்றைய தேர்தல் மேடைகளில் முழங்கியது எமக்கு நினைவிருக்கின்றது.

Read more: %s

முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரச்சார செயலர் புபுது ஜயகொட மற்றும் கட்சி உறுப்பினர் சுஜித் குருவிட்ட ஆகியோர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னிலை சோசலிச கட்சி மீதான அடக்குமுறை தொடர்கின்றது. குடிவரவு, குடியகல்வு சட்டத்தை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டு குமார் குணரத்தினம் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர், கடந்த ஏப்ரல் முதலாம் திகதி அவருக்கு இந்த நாட்டு குடியுரிமையை வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இதன் போது ஆர்ப்பாட்டகாரர்களிற்கும் அரச படைகளிற்கும் ஏற்ப்பட்ட முறுகல் நிலையில் அலுவலக கண்ணாடிகள் நொருங்கின.

Read more: %s

ரணில் - மைத்திரி அரசால், பொதுமக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள புதிய வரிச்சுமைக்கு (வற்) எதிராக முன்னிலை சோசலிசக் கட்சி நாடு தழுவிய போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளது. இன்று கொழும்பு புறக்க்கோட்டையில் நடந்த முதலாவது போராட்டப் படங்களை இங்கு காணலாம். மக்கள் ஏற்க்கனவே பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி திணறிக்கொண்டிருக்கின்றார்கள். அதற்கு அரசால் ஒரு விடிவைக் காண முடியவில்லை. மேலும் 15% மேலதிக விலை அதிகரிப்பை வற் என்ற பெயரில் திணித்துள்ளனர். உழைக்கும் மக்களை ஒட்ட உறிஞ்சி நடுவீதியில் விடும் இந்த கொடுமைக்கு எதிராக திரண்டு போராட வருமாறு அறைகூவல் விடப்பட்டது.

Read more: %s

மூத்த மகனை போன்று இரண்டாவது மகனான குமார் குணரட்ணத்தையும் தாம் இழக்க விரும்பவில்லை என அவரின் தாயார் ராஜமணி குணரட்ணம் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கேகாலையில் பிறந்து அங்கு கல்வி கற்ற பின்னர் பேராதனை பல்கலைகழகத்தில் கல்விகற்ற தனது மகனிற்கு ஏன் பிரஜாவுரிமையை வழங்க முடியாது எனவும் அவர் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

Read more: %s

More Articles …