25
Tue, Jun

முன்னிலை சோஷலிஸக் கட்சி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மக்கள் விடுதலை ஒத்துழைப்பு முன்னணி என்ற பெயரில் கிளர்ச்சி குழுவின் புதிய கட்சியை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதுடன் கட்சியை ஆரம்பிப்பதற்கான அறிவிப்பை வெளியிடும் மாநாடு சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் எதிர்வரும் ஏப்ரல் 9ம் திகதி நடைபெறவுள்ளது. என கிளர்ச்சி குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

 1978ஆம் ஆண்டு முதல் இதுவரையான ஜே.வி.பியின் செயற்பாடுகள் தொடர்பில் சுய விமர்சனம் முன்வைக்கப்படவுள்ளது.

 

78ஆம் ஆண்டு முதல் ஜே.வி.பியின் தலைவர்கள், பல சந்தர்ப்பங்களில் எடுத்த அரசியல் தீர்மானங்கள் காரணமாக மக்களுக்கும், கட்சிக்கும் அநீதி ஏற்பட்டதாகவும், மக்கள் விடுதலை ஒத்துழைப்பு முன்னணி சுயவிமர்சனம் செய்ய உள்ளதுடன், அதனை மீளாய்வு செய்ய உள்ளதாகவும் அந்த பேச்சாளர் கூறியுள்ளார்.

ஜே.வி.பியின் கிளர்ச்சி குழுவினர் இதுவரை மக்கள் போராட்ட அமைப்பு என்ற பெயரில் தமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

lankaviews.com