25
Tue, Jun

முன்னிலை சோஷலிஸக் கட்சி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

முன்னிலை சோசலிசக் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் குமார் குணரத்தினம் இன்று பகல் அநுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். அவரை வரவேற்றக கட்சி உறுப்பினர்கள், ஜனநாயகவாதிகள்,  சிவில் சமூகங்களை சேர்ந்தவர்கள் என ஆயிரத்திற்கும் அதிகமானோர் கூடியிருந்தனர். வெளியில் வந்த அவரை அங்கிருந்தோர் கட்டித் தழுவிக் கொண்டனர். அதனை தொடர்ந்து அங்கு வருகை தந்திருந்த ஊடகவியலாளர் மத்தியில் அவர் உரையாற்றினார்.

நேற்று மாலை குடிவரவு ,குடியகல்வு அதிகாரிகளோடு இடம் பெற்ற கலந்துரையாடலுக்கு, கட்சியின் சார்பாக துமிந்த நாகமுவ, அஜித் குமார மற்றும் ரவீந்திர முதலிகே ஆகிய சகோதரர்கள் கலந்து கொண்டனர். புதியதொரு விண்ணப்பபடிவத்தை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளால் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கேற்ப, இன்று அவ் விண்ணப்பபடிவத்தை சமர்ப்பிக்க ஏற்பாடாகியுள்ளது. மேலும் குடியுரிமை கிடைக்கும் வரை குமார் குணரட்ணம் சகோதரர் இலங்கையில் தங்கி இருப்பதற்கான வீசா இன்று வழங்கப்பட்டது.