25
Tue, Jun

முன்னிலை சோஷலிஸக் கட்சி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

குமார் குணரத்தினத்தை நாடு கடத்த மைத்திரி - ரணில் அரசு எடுத்துள்ள முடிவுக்கு எதிராக கடந்த 21ம் திகதி காலியில் மௌனப் போராட்டத்தை முன்னிலை சோசலிச கட்சியினர் ஆரம்பித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து 22ம் திகதி நிட்டம்புவ நகரத்தில் இந்த மௌனப் போராட்டம் இடம்பெற்றது. நேற்று (23/11/2016) பொல்லநறுவ நகரில் குமாரின் விடுதலை மற்றும் குடியுரிமையினை உறுதி செய்யும் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்றது. 

ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக மைத்திரி - ரணில் கூட்டு பல வாக்குறுதிகளை அள்ளி வீசி இருந்தனர். அதில் ஒன்று பிரதானமாக கூறப்பட்ட விடயம், மகிந்த ஆட்சியில் அரசியலில் ஈடுபட்டதற்க்காக உயிராபத்தை எதிர் கொண்டு புலம்பெயர்ந்தவர்கள் உடனடியாக நாடு திரும்பி அவர்களது அரசியல் வாழ்க்கையை தொடர உத்தரவாதம் வழங்கப்பட்டது. 

இன்று ஆட்சி அதிகாரத்தில் இரு வருடங்களை கடக்கின்ற இந்த கூட்டாட்சி கூறிய தேர்தல் வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றாது முன்னைய ஆட்சியின் தொடர்ச்சியாகவே இருப்பது தெட்ட தெளிவாகியுள்ளது. இவர்கள் வழங்கிய வாக்குறுதிகள் அவர்களின் நண்பர்களிற்கு மட்டுமே என்பதும் தெளிவாகி உள்ளது. இதற்க்காகதான் தேர்தல் காலத்தில் முன்னிலை சோசலிச கட்சியினர் முகமாற்றம் போதும் ஆட்சி அதிகார முறை மாற்றம் வேண்டும் எனப் பிரச்சாரம் செய்திருந்தனர்.

குமார் குணரட்னத்தின் குடியுரிமை ஏற்றுக்கொள்!

அனைத்து அரசியல் கைதிகளையும்  விடுதலை செய்!

காணாமல் போனோர்,  கடத்தல்களை வெளிப்படுத்து!

மக்கள் அடக்குமுறை சட்டங்கள் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தினை  நீக்கு!

ஆகிய கோசங்களை முன்வைத்து, இந்த அரசையும் அதனுடன் ஒட்டுண்ணியாக இணைந்துள்ள எதிர்க்கட்சி மற்றும் போலி இடதுசாரிய கட்சிகளின் ஜனநாயக விரோதத் தன்மையினை மக்கள் மத்தியில் வெளிக்காட்ட தொடர்ந்து இந்த மௌனப் போராட்டம் முக்கிய நகரங்களில் இடம்பெற இருக்கின்றன.