25
Tue, Jun

முன்னிலை சோஷலிஸக் கட்சி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

குமார் குணரட்னத்திற்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பில் பிரச்சினையில்லை என முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரச்சார செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

குமார் குணரட்னத்திற்கு ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பின்னர், அவருக்கு குடியுரிமையை வழங்குமாறு கோரி விண்ணப்பத்தை வழங்க மூன்றாவது முறையாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு நேற்று சென்றிருந்தோம்.

அப்போது பொலிஸார் மோதலுக்கான வழியை ஏற்படுத்தினர். முதல் முறையாக கைதி ஒருவரை வெலிக்கடை சிறைக்கு கொண்டு செல்லாது, அனுராதபுரம் சிறைச்சாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். குமார் குணரட்னத்திற்கு விருப்பமின்றி, அரசாங்கத்தின் விருப்பத்திற்கு அமைய இது நடைபெற்றுள்ளது எனவும் ஜாகொட குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள குமார் குணரட்னம் சகோதரரை மருத்துவ வசதிகள் உள்ள சிறைசாலையில் சிறைப்படுத்தாது அனுராதபுரம் சிறைசாலையில் ஆஜர்ப்படுத்தபட்டுள்ளது. இதனால் அவருடைய பாதுகாப்பு தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக புபுது ஜாகொட தெரிவித்தார்.

அரசாங்கம் புலம்பெயர்ந்தவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்த போதும் இவ்வாறு குடியுரிமை வழங்கப்படாது சிறைப்படுத்தபடும் நிலையே நல்லாட்சியில் காணப்படுவதாக முன்னனி சோசலிஷ கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் புபுது ஜாகொட தெரிவித்தார்.