25
Tue, Jun

முன்னிலை சோஷலிஸக் கட்சி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கை பிரஜாவுரிமையினை மீள கோரியமைக்காக முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதனை கண்டித்தும், அனைத்து அரசியல் கைதிகளையும் உடன் விடுதலை செய்யுமாறு கோரியும் நாளை சனி 06-02-2016 லண்டனில் உள்ள வெம்பிளி நகர சதுக்கத்தில் பிற்பகல் 2 மணி முதல் பதாகையில் கையெழுத்துப் போராட்டமும் துண்டுப்பிரசுர பிரச்சாரமும் நடைபெறவுள்ளது.

எங்களுடைய உரிமைகளை வென்றெடுப்பதற்காக அவற்றைப் பாதுகாத்துக் கொள்வதற்காக நாம் எமது கரங்களை இணைத்துக் கொள்வோமாக. இந்த நமது போராட்டத்தினை பலப்படுத்துவதற்காய் உங்களையும் இணையுமாறு வேண்டுகிறோம்.

குமார் குணரத்தினத்தின் அரசியற் உரிமைகளை நிலைநாட்டு !!!

அரசியல் அச்சுறுத்தல்களை நிறுத்து !!!

அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்!!!

ஜனநாயகம் குறித்து வழங்கிய தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்று !!!

 

முன்னிலை சோசலிச கட்சி

(பிரித்தானிய கிளை)