25
Tue, Jun

முன்னிலை சோஷலிஸக் கட்சி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மதிப்புக்குரிய மத குருமார்களே,

அன்புக்குரிய அன்னையரே, தந்தையரே,

தோழரே, தோழியரே.

கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக செயற்படும் இந்த இடைவிடாத சத்தியாக்கிரக எதிர்ப்பின் நோக்கம், தோழர் குமார் குணரத்தினத்தின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதுதான். தோழர் குமார் குணரத்தினம் கடந்த 04ம் திகதி கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார். அது மாத்திரமல்ல, அவரை மீண்டும் நாடு கடத்துவதற்கான சூழ்ச்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றன.

"தோழர் குமாரின் அரசியல் உரிமை" சம்பந்தமான பிரச்சினை என்பது, இந்த புதிய ஆட்சியில் அநேகமானோர் நாளை எதிர்கொள்ளவிருக்கும் பிரச்சினையின் முன்னறிவித்தலாகும். இதற்கு முன்பிருந்த ராஜபக்ஷ ஆட்சி தோழர் குமார் குணரத்தினத்தை கடத்தி கொலை செய்ய தயாராகும்போது அரசியல் கட்சிகளிடமிருந்தும், மனித உரிமை அமைப்புகளிடமிருந்தும் வந்த நெருக்குதல் காரணமாகத்தான் நாடு கடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்போது இந்த அரசாங்கம் அவரை கடத்தாவிட்டாலும் நாடு கடத்த தயாராகின்றது.

இந்நாட்டில் பிறந்து வளர்ந்து, கல்வி கற்று அரசியல் செய்த ஒரு நபரின் குடியுரிமையை இல்லாமலாக்க அரசாங்கத்திற்கு உரிமை உண்டா? இதற்கு இடமளித்தால், அரசாங்கத்திற்கு எதிராக அரசியல் செய்யும் மேலும் அநேகருக்கு இந்த தலைவிதிதான் உரிமையாகும். பயமுறுத்தல், வழக்கு தொடுத்தல் ஊடாக மேலும் பலரின் அரசியலை தடுக்க அரசாங்கம் தயாராகிறது. இந்த புதிய ஆட்சி தருவதாகக் கூறிய ஜனநாயமா இது?

இந்த கூட்டாட்சி நாட்டில் நடந்த அநேகமான ஆர்ப்பாட்டங்களின் மீது தாக்குதல்கள்; நடத்தியிருக்கின்றது. கொட்டகெத்த கிராம மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மீது, பந்தகிரிய மக்களின் குடிக்க தண்ணீர் கேட்டு நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மீது, யாழ்ப்பாண மக்கள் 'வித்தியா" என்ற சிறுமியின் படுகொலைக்கு எதிராக நடத்திய ஆர்ப்பாட்டத்தின மீது. பல்வெஹெர விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்தின் மீது, கல்வியை விற்பனை செய்ய வேண்டாமென கூறி மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மீது நடத்திய தாக்குதல்கள் உதாரணங்களாக உள்ளன. தரப்போகும் ஜனநாயகத்தின் தரம் என்னவென்று இதன் மூலம் தெரிகிறது.

நாளை இந்த ஆட்சியாளர்கள் செல்லவிருக்கும் பாதையை செப்பனிடுவதற்குத்தான் வாய்திறக்கும் எல்லோரையும் வாய்மூடச் செய்கின்றனர். இடதுசாரிய அரசியலுக்கு, உழைக்கும், பாடுபடும் மக்களின் அரசியலுக்கு உயிரூட்ட முயலும் முன்னிலை சோஷலிஸக் கட்சியை இப்படி தாக்குவதற்கு காரணம் அதுதான்.

தோழர் குமார் குணரத்தினத்தின் மீதான இந்த அடக்குமுறைக்கு காரணம், அவர் தோற்றி நிற்கும் அரசியல்தான். இடதுசாரிய அரசியல்தான். அரசாங்கத்திற்கு எதிரான அரசியலை சட்டத்தின் பாதுகாப்பு ஊடாக, அமைதியின் சூழ்ச்சியின் ஊடாக அடக்குவதற்கு தயாராகும் இந்த முயற்சியை தோற்கடிக்க முன்வாருங்கள். நாளைய நாளில் நாட்டில் அதிகரிக்கக் கூடிய ஜனநாயகத்திற்கு எதிரான ஆபத்துக்கு இடம் வைக்காது முன்வாருங்கள். அரசியல் செய்வது ஜனநாயக உரிமை. எந்த ஆட்சியாளனாலும் அதனை பறிக்க முடியாது. அதற்காக குரலெழுப்புங்கள். உண்மையான ஜனநாயகம், உண்மையான சுதந்திரத்திற்காக முன்வாருங்கள்.

முன்னிலை சோஷலிஸக் கட்சி