25
Tue, Jun

முன்னிலை சோஷலிஸக் கட்சி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இன்று ஜீலை 11ம் திகதி பிற்பகல் 3 மணிக்கு  மகரகமவில் முன்னிலை சோசலிச கட்சி, பொதுத் தேர்தல் 2015 இன் முதலாவது பிரச்சாரக் கூட்டத்தை தொடக்கி வைத்தது. இடதுசாரிய பலம் என்பது உண்மையான மாற்றத்திற்க்கான ஒரே மார்க்கம் என்பதனை மக்களிடம் எடுத்துச் செல்லுதலே, இத்தேர்தலில் கட்சியின் முக்கிய குறிக்கோள் என பிரச்சார செயலாளர் திரு புகுபுடு ஜெயக் கொட அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் இதற்கான பிரச்சாரங்களை மக்களிடம் எடுத்துச் செல்லவுள்ளது முன்னிலை சோசலிச கட்சி. "உண்மையான மாற்றம் - இடதுசாரிய பலம்" என்ற சுலோகத்தை முதன்மை படுத்தி முன்னிலை சோசலிச கட்சி அனைத்து மாவட்டங்களிலும் தனது வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. இன்று மகரகமவில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் புகுடு ஜெயகொட, துமிந்த நாகமுவ, கிருபாகரன் தர்மலிங்கம் உட்பட பல தோழர்கள் உரையாற்றியிருந்தனர்.