25
Tue, Jun

முன்னிலை சோஷலிஸக் கட்சி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கடந்த மகிந்த ஆட்சியில் மக்களிற்கு மறுக்கப்பட்ட ஜனநாயகத்தை நிலை நாட்டுவதே தனது முதல் பணி என உறுதி வழங்கியதனால் அனைத்து இன மக்களின் பெரும் ஆதரவுடன் மைத்திரி ஜனாதிபதி ஆக்கப்பட்டார். ஜனநாயகத்தை உறுதி செய்வதற்க்கான 100 நாள் வேலைத்திட்டம் மற்றும் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையினை இல்லாது ஒழித்தல் என பல குறிக்கோள்களை முன் வைத்தனர்.

இப்போது ஜனாதிபதி ஆட்சி முறை ஒழிக்கப்படமாட்டாது சில அதிகார குறைப்புகள் மட்டும் தான் என கூறுவதுடன் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு என்ன நடந்தது என்பது கேள்விக்குறியாக மாறிப்போயுள்ளது.

-இன்று நாட்டில் பழைய ஆட்சிமுறையே தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளது.

-தோற்றம் மாறியிருக்கிறது. உள்ளடக்கம் மாறவில்லை.

-நடிகர்கள் மாறியுள்ளனரே ஒழிய நாடகத்தின் கதை மாறவில்லை. வசனங்கள் மாறியுள்ளதே தவிர நாடகத்தின் கரு மாறவில்லை.

இதனை அம்பலப்படுத்த இன்று 24ம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு பிலியந்தலையில்இ இடதுசாரிய முன்னணியில் உள்ள கட்சிகளின் ஆதரவுடன் முன்னிலை சோசலிச கட்சி மக்கள் கூட்டம் ஒன்றினை ஒழுங்கு செய்தது.(படங்கள் )