25
Tue, Jun

முன்னிலை சோஷலிஸக் கட்சி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

முன்னிலை சோஷலிசக் கட்சியினால் நாடுபூராகவும் நடத்தப்பட்டுவரும் ​காணாமல் போனோர் மற்றும் கடத்தப்பட்டோரை கண்டுபிடிக்குமாறு கோரிய கையெழுத்து போராட்டம் இன்று மட்டக்களப்பு நகரில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு பிரதான பஸ்தரிப்பு நிலையத்திற்கு முன்னால் இடம்பெற்ற கையெழுத்து போராட்டத்தின்போது பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கையெழுத்திட்டனர்.

குமார் குணரத்தினத்தின் அரசியல் உரிமையை பறிக்காதே!

காணாமல் போனவர்களையும் கடத்தப்பட்டவர்களையும் மீட்டுத்தா!

போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இதன்போது, குமார் குணரத்தினம் உட்பட நாடு கடத்தப்பட்ட அனைவரினதும் அரசியலில் ஈடுபடும் உரிமையை பறிக்காதே எனும் தலைப்பில் துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. முன்னிலை சோஷலிசக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ஆர்.கே.இந்திராநந்த, சம உரிமை இயக்கத்தின் செயற்பாட்டாளர்  தர்மலிங்கம் கிருபாகரன் உட்பட பலர் இதில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.