25
Tue, Jun

முன்னிலை சோஷலிஸக் கட்சி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தோழர் குமார் குணரத்தினத்தினை நாடு கடத்தும் நோக்கில் விசாரணை மற்றும் கைது முயற்சியினை எதிர்த்து இன்று 31/01/2015 கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கீழ் காணும் பதாதைகளை ஏந்திய வண்ணம் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்

1. தோழர் குமார் குணரத்தினத்தை நாட்டுக்குள் அரசியலில் ஈடுபட இடமளி!

2. அடக்குமுறை காரணமாக புலம் பெயர்ந்தவர்களை நாட்டில் அரசியலில் ஈடுபட இடமளி!

3. ராஜபக்ஷ ஆட்சியில் அரசியல் உரிமை பறிக்கப்பட்ட அனைவருக்கும் அரசியலில் ஈடுபடும் உரிமையை வழங்கு!

மேலும் கீழ் காணும் கோசங்களை எழுப்பி சகலரதும் அடிப்படை உரிமைகளை உறுதி செய்யுமாறு முழக்கம் இட்டனர்.

1. அரசியலில் ஈடுபடும் உரிமையை பறிக்க இடமளியோம்!

2. அரசியல் காரணங்கள் மீது புலம் பெயர்ந்தவர்களின் உரிமைகளை பறிக்காதே!

3. தோழர் குமார் குணரத்தினத்தின் அரசியலில் ஈடுபடும் உரிமையின் மீது கை வைக்காதே!

4. மக்களே, உரிமைகளை பாதுகாக்க அணிதிரள்வோம்!

5. ஜனநாயகம் அரசாங்கத்தின் நண்பர்களுக்கு மாத்திரமா?

6. சர்வாதிகாரி மஹிந்தரின் ஆட்சியில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதியை பெற்றுக் கொடு!

7. சட்டத்தின் பெயரால் நடத்தும் அடக்குமுறைக்கு எதிர்ப்போம்!!