25
Tue, Jun

முன்னிலை சோஷலிஸக் கட்சி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நாளை 15.07.2014 கொழும்பு பொது நூல் நிலையத்தில் இனவாதத்திற்கும், மதவாதத்திற்கும், குலவாதத்திற்கும் (சாதியத்திற்கும்) எதிரான நாங்கள் மனிதர்கள் என்ற கருப்பொருளில் சமவுரிமை இயக்கத்தால் மாநாடு நடக்கவிருக்கும் நிலையில், சனிக்கிழமை அன்று நுவரெலியாவில் மீண்டும் ஒரு கறுப்பு யூலை வேண்டம் என்ற கையேழுத்து போராட்டம் இடம் பெற்றுள்ளது. இதில் மூவின மக்களும் இனைந்து தமது ஆதரவை தெவித்துள்ளனர். இதுவரை நடந்த இடங்களை விட அதிகமாகவர்கள் ஆர்வத்துடன் பங்களித்தமை சமவுரிமை இயக்கத்தில் செயற்பாட்டை மேலும் வலியுறுத்தியுள்ளது.

இன, மத. சாதியவாதம் கலந்த சமூகத்தில் அதைப்பற்றி எவரும் வாய்திறக்காமல் மௌனமாக இருந்து வரும் நிலையில், அரசு தனது பிரித்தாளும் தந்திரத்தை மேற்கொள்ளவதற்காக சமவுரிமை என்று பொய் பேசிவரும் நிலையில், சமவுரிமை இயக்கம் மட்டும் தான் இன்று இலங்கையில் மக்களை ஆட்சியாளர்கள் பிரித்து வைத்திருக்க முயலும் இனவாதம், மதவாதம, சாதியத்திற்கு எதிராக மக்களை விளிப்பு ஏற்ப்படுத்தி போராட அணிதிரட்டி வருகின்றது.

எவ்வாறு அரசு தனது நலனுக்காக சமவுரிமை என்ற வார்த்தையை பயன்படுத்துதோ அது போன்று தமிழ் இனவாதிகள் தமது நலனுக்காகவும் இருப்புக்காகவும் தமிழ் தேசியம் என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.