25
Tue, Jun

முன்னிலை சோஷலிஸக் கட்சி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

முஸ்லிம் மக்களுக்கு எதிரான இன முறுகல் நிலை நேற்று அளுத்கமயில் உக்கிரமடைந்து மூன்று அப்பாவி உயிர்களை காவு கொண்டு விட்டது. இவ்வாரானதொரு சூழல்தான் வடக்கு கிடக்கில் யுத்தத்திற்கு மூல காரணியாக காணப்பட்டது.

30 வருட யுத்தம் முடிவடைந்து. 05 வருடங்கள் கழிந்த நிலையிலும் இன்னமும் அந்த வடுக்கள் மக்கள் மத்தியில் ஆறவில்லை. நிலைமை இவ்வாறு இருக்கையில், நேற்று அளுத்கமயில் நடந்திருக்கும் சம்பவமானது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும் என்று முன்னிலை சோசலிச கட்சி இன்று (16) ராஜகிரியவில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது கட்சியின் உறுப்பினர் ரவீந்திர முதலிகே மற்றும் புபுது ஜாகொட ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.

அன்று வடக்கு கிழக்கிள்ல் போலியான யுத்தத்தினால் அப்பாவி பொதுமக்கள் பெருமளவில் பலியாகினர். அந்த வடுக்கள் இன்னும் ஆறாத நிலையில் நேற்று நடந்த அளுத்கம சம்பமானது முஸ்லிம் மக்கள் மத்தியில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்று ஏகாதிபத்தியத்தோடு இணைந்து கொண்டு இந்த அரசாங்கம் அப்பாவி பொது மக்ளை கொன்று குவித்தது. அதனால் யுத்தகுற்றச் செயல்களை விசாரிக்க ஐ.நா வரவிருக்கின்ற சந்தர்ப்பத்தில் அதை மூடி மறைப்பதற்காக தங்களுக்கு ஆதரவான பொதுபலசேனா போன்ற மத வாத கும்பலை தூண்டி அதில் அரசு தனது பாவக் கறைகளை கழுவிக்கொள்ள நினைக்கின்றது. இது அப்பாவிப் பொதுமக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் காட்டுமிராண்டித்தனமான செயலாகும். இதனை முன்னிலை சோசலிச கட்சி வன்மையாக கண்டிப்பதுடன், அனைத்து பொது மக்களும் இந்த மக்கள் விரோத அரசாங்கத்திற்கு எதிராக போராட வேண்டும் என்றும் அந்த ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்டனர்.