25
Tue, Jun

முன்னிலை சோஷலிஸக் கட்சி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

யுத்தம் முடிவடைந்து மூன்றரை ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தையும் அரசு வழங்கவில்லை இந்தக் காலப்பகுதில் ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபட்ட அரசு தமிழர்களின் கலாச்சாரத்தையும் மாற்றியமைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.செய்ய வேண்டியதை செய்யாது அரசு முற்றிலும் மாறான பாதையிலே பயணிக்கின்றது. குறிப்பாக ஜெனிவாவில் தீர்மானம் நிறைவேறியதால் பிரச்சினை தீர்ந்து விட்டதாக அர்த்தப்படாது. எனவே அரசு உள்நாட்டில் பொறிமுறையை வகுக்க வேண்டும் இனங்களுக்கிடையிலான தேசிய சமத்துவத்தை கட்டயெழுப்ப வேண்டும்.

ஜெனிவா பிரேரணை விடயத்தில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காக அரசு நாட்டின் பொருளாதாரத்தை அமெரிக்காவிடம் வழங்கவும் இரகசிய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது என்றும் புபது ஜாகொட தெரிவித்தார்.

altஜெனிவாவின் பிடிக்குள் இருந்து தப்பிப்பதற்கு நாட்டின் பொருளாதாரத்தை அமெரிக்காவிடம் அடகு வைப்பதற்கு அரசு திட்டம் வகுத்துள்ளது. என்று முன்னிலை சோசலிச கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

அத்துடன் தமிழர்கள் பிரச்சனைக்கு ஜெனிவா தீரம்மானம் தீர்வல்ல என்றும் அக்கட்சி கூறியுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்கத்தீர்மானம் தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே கட்சியின் ஊடகப்போச்சாளர் புபது ஜாகொட இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன் ஜெனிவாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு இந்த அரசின் செயற்பாடுகள் தான் காரணம் என்று சுட்டிக்காட்டினார்.