25
Tue, Jun

முன்னிலை சோஷலிஸக் கட்சி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times


முன்னிலை சோசலிசக் கட்சியின் உறுப்பினர்கள் இருவர் நீர்கொழும்பு பிரதேசத்தில் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த போது, அங்கு சென்ற இராணுவத்தினர், கட்சியின் உறுப்பினர்களை அச்சுறுத்தியதுடன் அவர்கள் ஒட்டிய சுவரொட்டிகளை கிழித்தெறிந்துள்ளனர்.

இன்று அதிகாலை 5மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு இராணுவத்தினர், சோசலிசக் கட்சியின் உறுப்பினர்களை அச்சுறுத்தியுள்ளதுடன், அவர்கள் வைத்திருந்த சுவரொட்டிகளை பறித்துச் சென்றுள்ளனர்.அவ் உறுப்பினர்களையும் கடத்திச் சென்றுள்ளனர்.



 இந்த நிலையில், கடத்திச் செல்லப்பட்ட தமது கட்சியின் உறுப்பினர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என சோசலிச கட்சி தெரிவித்துள்ளது. இந்த சம்பவமானது கருத்துச் சுதந்தரம் மற்றும் அரசியல் சுதந்திரத்தை பறிக்கும் செயல் என முன்னிலை சோசலிசக் கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

http://www.lankaviews.com/ta