26
Wed, Jun

இன்று காலை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக கூடிய ஜனநாயக்திற்காக போராடும் அமைப்பினர்," ஜனநாயகம் எமக்கு பொருந்துமா?" என்ற தலைப்பிட்ட துண்டுப்பிரசுரத்தினை பரவலாக விநியோகித்தனர்.  ஜனநாயக உரிமைகள் சார்பாக துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்த இந்த குழுவில்  இடது அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புக்கள் மற்றும் கலைஞர்கள் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more: %s

ராஜபக்ச ஆட்சியை தோற்கடிக்க  அடிப்படை பொது கொள்கையாக ஜனநாயக உரிமைகளை பாதுகாத்தல் இருந்தது. ராஜபக்ச ஜனநாயக உரிமைகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளார். ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்துவதே தமது பிரதான குறிக்கோள் என்று ஆட்சியை பிடித்த புதிய ஆட்சியாளர்கள் முன்னைய ஆட்சிக்கு மேலாக ஜனநாயக உரிமைகளுக்கு அச்சுறுத்தல்கள் விடுப்பவர்களாக மாறி உள்ளனர். இந்த அரசிடமிருந்து ஜனநாயக உரிமைகளுக்கு விடப்பட்டுள்ள சவால்களுக்கு எதிராக போராடவும், ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்கவும்; இடதுசாரி அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் சமூக அமைப்புக்கள், மாணவர் அமைப்புக்கள், கலைஞர்கள் பல்வேறு குழுக்கள் இணைந்து ஜனநாயக்திற்காக போராட புதிய படையினை அமைத்துள்ளனர். இந்த அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (13-06-2016) கொழும்பு தேசிய நூல் நிலையத்தில் உள்ள ஆவணங்கள் சேவைகள் சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

Read more: %s

இளமைக் காலத்தில் காணும் கனவு போல் வேறு பருவங்கள் எமது வாழ்வில் இருந்தது இல்லை. இளமை பருவத்தில் காணும் அக் கனவை நனவாக்கிப் பார்ப்பதற்காக எமது வாழ்நாள் முழுவதும் முயற்சிக்கும் எம்மில் அநேகம் பேருக்கு அக்கனவு கனவாக மட்டுமே இருக்கின்றது. பல அரசியல்வாதிகள் இளைஞர்களை தங்களது எடு பிடிகளாக வைத்திருப்பது, எமது கனவை எமக்கே விற்பதற்கே. முதலாளித்துவ கம்பனிகள் அவர்களது பண்டங்களை எமக்கு விற்பதும், எமது கனவை அவர்களின் பிரச்சாரத்திற்கு பாவிப்பதன் மூலமே.

Read more: %s

வெள்ளம் மற்றும் மண் சரிவால் நாடே சிக்கித் திணறுகின்றது. பல பொதுமக்கள் உயிர் இழந்தும், காணமலும் போய்யுள்ளனர். வெள்ளத்தில் மூழ்கிய மக்கள் உணவு, உடை, தங்குமிடமின்றி தத்தளிக்கின்றனர். பொதுமக்களின் பல்வேறு உதவிகளுடன் சமூக தொண்டர்கள் களத்தில் மக்களுக்கு உதவி வருகின்றனர்.

அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியமும் முழுமுச்சாக பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களிற்கு உதவி வருகின்றது. உதவி தேவைப்படும் இடங்களை இனம் கண்டு, அதற்கு முன்னுரிமை அளித்து பணியாற்றுகின்றது.

Read more: %s

குறிப்பு:  பொருளாதார அபிவிருத்தி அடையாத வறிய நாடுகள் உலக நிதி நிறுவனங்களிடம் பெற்ற கடனையும் அதற்கான கந்து வட்டியையும் கட்ட முடியாது திணறிக் கொண்டிருக்கின்றன. இந்த நாடுகளிடம் கடனை திரும்ப பெறும் முகமாக பல பரிந்துரைகளை அமுலாக்கும்படி நிதி நிறுவனங்கள் நெருக்குதலை கொடுத்த வண்ணமுள்ளன. அதாவது சமுக நலத் திட்டங்களிற்கான உதவியை குறைத்தல், ஓய்வூதிய வயதை அதிகரித்தல், சுகாதாரம் மற்றும் கல்விக்கான  நிதி ஒதுக்கீட்டை  குறைத்தல் என பலவகை நெருக்குதல்கள். உலக நிதி நிறுவனங்களின் ஆலோசனைக்கு அமைய இலங்கையில்  இலவச கல்வியினை இல்லாது ஒழிக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதனை மக்களிற்கு விழிப்பூட்டும் முகமாக ஜனாதிபதி அவர்களிற்கு ஒரு கடிதம் எழுதப்பட்டு நாடு முழுவதும் மக்களிடம் கையெழுத்து வாங்கும் நடவடிக்கை அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Read more: %s

More Articles …