25
Tue, Jun

தோழமை அமைப்புகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கை அரசின் பொலீஸ் குண்டர்களால் துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்டு யாழ் பல்கலை மாணவர்  படுகொலைக்குள்ளானதை கண்டித்தும், நீதி கோரியும் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக ஜனநாயகத்திற்கான ஆர்ப்பாட்டகாரர்கள் போராட்டத்தில் இன்று (24/10/2016) ஈடுபட்டிருந்தனர். இதில் இடதுசாரிய கட்சிகள, தொழிற்சங்கங்கள் வெகுஜன அமைப்புக்கள் பங்குபற்றியிருந்தன.

நாடு மீண்டும் அரச பயங்கரவாதத்திற்குள் திரும்புவதை கண்டித்தும், பொது மக்களின் ஜனநாயகம் - பாதுகாப்பை உறுதியடுத்துவதை வலியுறுத்தியும் இதில் கலந்து கொண்டவர்கள் தமது கருத்துக்களை பதிவு செய்து கொண்டனர்.