25
Tue, Jun

தோழமை அமைப்புகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கொழும்பு கோட்டையில் இன்று (10/10/2016) பிற்பகல் 3 மணியளவில் ஜனநாயகத்திற்கான போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். போராட்டக்காரர்கள் தமது கோரிக்கைகளாக "குணரட்னம் உள்ளிட்ட அனைத்து அரசியல் கைதிகளும் உடனடியாக விடுதலை செய்!", "குமார் குணரத்தினத்தின் குடியுரிமையை ஏற்றுக் கொள்!", "அடக்குமுறை சட்டங்களை ரத்து செய்!" ஆகியவற்றை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிகளவிளான பொது மக்கள் பங்கு பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இங்கு உரை நிகழ்த்திய முன்னிலை சோசலிச கட்சி அரசியல் சபை உறுப்பினர் சமீர கொஸ்வத்த அவர்கள், மக்களுக்கான ஜனநாயகத்தை மைத்திரி - ரணில் கூட்டாட்சி உறுதிப்படுத்த தவறி விட்டதுடன் அதனை கொள்ளை அடித்து மக்களின் மேல் ஜனநாயக விரோத ஆட்சியை நடத்துகின்றது. ஜனநாயகத்தை நேசிக்கும் அனைவரும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த தொடர்சியான போராட்டங்களில் ஈடுபட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இடதுசாரிக் கட்சிகள், சிவில் அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், மாணவர் இயக்கம் மற்றும் ஆர்வலர்கள் உள்ளடக்கிய ஜனநாயக ஆர்ப்பாட்டக்காரர்கள் எல்பின்ஸ்டன் சினிமா அரங்குக்கு, மருதானை அருகில் கூடி கோஷங்களை எழுப்பிய வண்ணம், ஊர்வலமாக கோட்டையினை நோக்கி வந்து கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னிலை சோசலிசக் கட்சி, இலங்கை முன்னணி கட்சி, சோசலிஸ்ட் கட்சி, சோ, சோசலிச ஒன்றியம், præksis கூட்டமைப்பு, ஏற்பாடு குரல் விட்டு, மாணவர் வாரியம், ஒருங்கிணைந்த பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் ஏராளமான பொது மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.