25
Tue, Jun

தோழமை அமைப்புகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சமபவம் குறித்து பல்வேறு பட்ட தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவை அரசியல் லாப நோக்குடைய இனவாதத்திற்குள் மக்களை இட்டுச்செல்லும் ஆபத்துக்கள் நிறைந்தனவாக இருக்கின்றன என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களின் தலைவர் லகிரு வீரசேகரா இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

கடந்த இறுதி யுத்தத்தின் போதும் இதே போன்ற சில உண்மைக்கு புறம்பான  தகவல்கள் வெளிவந்திருந்தன. அவற்றால் இறுதி யுத்தத்தில் என்ன நடந்தது என்ற உண்மையான தகவல்களை மக்களிற்கு தெரியப்படுத்தி இருக்கவில்லை. இன்னமும் உண்மையில் என்ன நடந்தது என்பது பற்றிய தகவல்கள் மக்களிற்கு தெரியப்படுத்தவில்லை.

இந்த யாழ் பல்கலைக்கழக சம்பவத்திலும் சிலர் தமது அரசியல் மற்றும் தனிப்பட்ட நோக்கங்களிற்க்காக  உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களின் நோக்கம் இனவாத தீயில் லாபமடைவதே.

இது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்று. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இதனை வன்மையாக கண்டிக்கின்றது. இந்த இனவாத முன்னெடுப்புக்குப எதிராக மாணவர்களை மற்றும் பொது மக்களை ஒன்றிணைய அறைகூவல் விடுக்கின்றது என தெரிவித்தார்.