25
Tue, Jun

தோழமை அமைப்புகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் நிகழ்வு ஒன்றின் போது ஏற்பட்ட அடிதடி காரணமாக, பல்வேறு தரப்பினர் இனவாதத்தைத் தூண்டும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதை வன்மையாக கண்டிப்பதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் லஹிரு வீரசேகரவின் கையொப்பத்திலான அவ் அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

"சிங்கள-தமிழ் மாணவர் தொடர்பிலான முதலாம் வருட வரவேற்பு விருந்துபசாரத்தின் போது, கலாசார நிகழ்வு பயன்படுத்தியமைக்காக இரு சாராரிடையே ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கலாசார நிகழ்வு ஒன்றுக்காக இரு பிரிவாக பிரிந்து சண்டையிட்டு கொள்வதை நாம் ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லை.

எந்த பிரிவினரால் நடத்தப்பட்டிருந்தாலும், எவ்விதத்திலும் நடக்கக்கூடாத ஒன்றாகும். அத்தோடு இச்சண்டையின் வெளிப்பாடு இனவாதமாக இருந்தாலும், அதற்கான பதில் இனவாதமாக இருக்கக்கூடாதென்பதை கவனத்தில் கொள்கிறோம். அதனால் இந்த அடிதடியை அடிப்படையாக கொண்டு இனவாதத்தை விதைக்கும் செயலையும் நாம் அனுமதிக்க மறுக்கிறோம்.

இந்த அடிதடியை பல்வேறு தரப்பினரால் மோசமான முறையில் இனவாதத்தை பரப்புவதற்காக பயன்படுத்தும் முயற்சியை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.

அதேபோல் சிங்கள, தமிழ், முஸ்லிம் உட்பட அனைத்து மக்கள் பிரிவினரினதும் பொதுவான உரிமைகள் பறிக்கப்படும் (இல்லாதொழிக்கும்) நிலைமைக்கு முகம்கொடுக்கக்கூடிய சந்தர்ப்பத்தை இவ்வாறான நிகழ்வுகள்களைக் கொண்டு உண்டு பண்ணுவதூடாக, பொதுப் பிரச்சினைக்கு தீர்வுதேடும் நோக்கத்தில் (அனைத்து மக்களும்) ஒன்று சேர்வதை தடுப்பதற்கும், பொதுப் பிரச்சினைகள் தொடர்பில் மக்கள் அணிதிரள்வதை தடுப்பதற்கும் ஆட்சியாளர்களுக்கு வழிசமைக்கும்.

அத்துடன் கடந்த காலங்களில் இவ்வாறான நிகழ்வுகளைப் பயன்படுத்தி, ஆட்சியாளர்கள் தங்களின் அரசியல் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள எடுத்த முயற்சியும், அந்தக்கசப்பான அனுபவத்தை எம்நாட்டு மக்கள் அனுபவிக்க நேர்ந்த சந்தர்ப்பத்தை மீண்டும் ஏற்படுத்தும்.

ஆகவே, யாழ் பல்கலைக்கழக சகோதர, சகோதரிகள் மற்றும் அனைவரிடமும் நாம் வேண்டி நிற்பது, இவ்வாறான ஒரு பின்புலத்தை ஆட்சியாளர்களுக்கு ஏற்படுத்தி கொடுப்பதற்கு பதிலாக இனவாதத்திற்கு எதிராக ஒன்றாக போராடுவோம் என்பதாகும். அதற்காக ஒன்று சேர்ந்து இந்த அடிதடியை பாவித்து இனவாதத்தை தூண்டும் முயற்சியை முறியடிப்போம் என கேட்டுக்கொள்கிறோம்.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் (IUSF)